பொது செய்தி

தமிழ்நாடு

தரிசு நிலங்களை மேம்படுத்த 2,500 கிராமங்கள் தேர்வு

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்த 2,500 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.மாநிலம் முழுதும் 46 லட்சம் ஏக்கருக்கு மேலான தரிசு நிலங்கள் உள்ளன. இவற்றை சாகுபடிக்கு பயன்படுத்தினால் மாநிலத்தில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம். கிராமப்புற பொருளாதாரமும் பெருகும். இதை கருத்தில் வைத்து,

சென்னை:ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை மேம்படுத்த 2,500 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாநிலம் முழுதும் 46 லட்சம் ஏக்கருக்கு மேலான தரிசு நிலங்கள் உள்ளன. இவற்றை சாகுபடிக்கு பயன்படுத்தினால் மாநிலத்தில் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள் தேவைகளை பூர்த்தி செய்யலாம். கிராமப்புற பொருளாதாரமும் பெருகும். இதை கருத்தில் வைத்து, கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த, அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் கீழ், 12 ஆயிரத்து 525 கிராமங்களில் உள்ள 29 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்கள் ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக, 2,500 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த கிராமங்களில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம், வருவாய் உள்ளிட்ட துறைகள் இணைந்து, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளன.

நிலங்களை மேம்படுத்துதல், நீராதாரங்களை பெருக்குதல், சூரியசக்தி 'பம்ப் செட்' அமைத்தல், நுண்ணீர் பாசனம் அமைத்தல், பால் உற்பத்தியை பெருக்குதல், பயிர்க்கடன் வழங்குதல், பாசன வழித்தடங்கள் துார் வாருதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின், முறைப்படி விரைவில் துவக்கி வைக்கவுள்ளார். எனவே, தேர்வு செய்யப்பட்ட கிராமங்கள் பட்டியலில், சிறிய மாற்றங்களைசெய்வது குறித்து, வேளாண் துறை செயலர்சமயமூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை, தோட்டக்கலைத் துறை இயக்குனர் பிருந்தாதேவி உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X