எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கு 'ரெட் அலெர்ட்' அதி கன மழை எச்சரிக்கை

Updated : அக் 02, 2021 | Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்யும் என்பதால், நான்கு மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது; அத்துடன், 4ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட்தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் அதி கன மழை மற்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.அதி கனமழை
தமிழகத்துக்கு 'ரெட் அலெர்ட்' அதி கன மழை எச்சரிக்கை

சென்னை:டெல்டா மற்றும் தெற்கு கடலோர மாவட்டங்களில் இன்று அதி கன மழை பெய்யும் என்பதால், நான்கு மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது; அத்துடன், 4ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


ரெட் அலெர்ட்



தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் அதி கன மழை மற்றும் கன மழைக்கு வாய்ப்புள்ளது.அதி கனமழை பெய்யும் மாவட்டங்களில், சில இடங்களில் ஒரே நாளில், 20 செ.மீ.,க்கு மேல் கனமழை கொட்டும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.இதற்காக அந்த மாவட்டங்கள், ரெட் அலெர்ட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கும், முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

இன்று முதல், 4ம் தேதி வரையிலான மழை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவங்கை, துாத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங் களில், இன்று அதி கனமழை; கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில், இன்று மிக கன மழை பெய்யும்.கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலுார், பெரம்பலுார் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும்.


கன மழை பெய்யும்.



வரும் 4ம் தேதி தென் மாவட்டங்களில், மிக கனமழை பெய்யும். சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, அரியலுார், பெரம்பலுார் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ., மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X