பொது செய்தி

தமிழ்நாடு

20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய கடிதம்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:விவசாயிகளிடம் இருந்து, 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய உணவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.தமிழக விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் சார்பில் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. இதற்காக, மத்திய - மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குகின்றன. நேற்று துவங்கிய
 20 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்ய கடிதம்

சென்னை:விவசாயிகளிடம் இருந்து, 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி கேட்டு, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், மத்திய உணவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.

தமிழக விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் சார்பில் நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் செய்கிறது. இதற்காக, மத்திய - மாநில அரசுகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்குகின்றன. நேற்று துவங்கிய நடப்பு சீசன் 2022 செப்டம்பரில் முடிவடைகிறது.

இந்த சீசனில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால், நெல்லில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.இதனால் 25 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யுமாறு, விவசாயிகள்கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் டில்லி சென்று, மத்திய உணவுத் துறை அமைச்சர் பியுஷ் கோயலிடம், 20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
அதே கோரிக்கையை வலியுறுத்தி, தற்போது வாணிப கழகம், மத்திய உணவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. இதை தொடர்ந்து, மத்திய குழுவினர், தமிழகத்தில் நெல்லின் ஈரப்பதம்குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதன் அளவை உயர்த்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X