பொது செய்தி

தமிழ்நாடு

சர்வதேச 'பர்னிச்சர்' பூங்கா தூத்துக்குடியில் பணிகள் ஜரூர்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:துாத்துக்குடியில் அமைய உள்ள சர்வதேச 'பர்னிச்சர்' தொழில் பூங்காவுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. துாத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் தொழில் பூங்கா, 1,100 ஏக்கர் பரப்பளவில் நாட்டில் முதன்முதலாக அமைக்கப்பட உள்ளது. அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஏற்றுமதி சார்ந்த மரத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வகையிலும், பர்னிச்சருக்கு

சென்னை:துாத்துக்குடியில் அமைய உள்ள சர்வதேச 'பர்னிச்சர்' தொழில் பூங்காவுக்கு, சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

துாத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் தொழில் பூங்கா, 1,100 ஏக்கர் பரப்பளவில் நாட்டில் முதன்முதலாக அமைக்கப்பட உள்ளது. அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஏற்றுமதி சார்ந்த மரத் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் வகையிலும், பர்னிச்சருக்கு என தனி தொழில் பூங்கா உருவாக்கப்பட உள்ளது.இங்கு பூங்கா அமைப்பதற்கான, சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, 'சிப்காட்' அதிகாரிகள் கூறியதாவது:துாத்துக்குடியில் சர்வதேச பர்னிச்சர் தொழில் பூங்கா அமைப்பதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை எனும், டி.டி.சி.பி., அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.அதற்கு தேவையான, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த தொழில் பூங்கா வாயிலாக, ஒரு லட்சம் நபருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வியட்நாம் மற்றும் மலேஷியா நாடுகளின், பர்னிச்சர் விலையை விட, குறைந்த விலையில் தயாரிப்பது முதல் நோக்கமாக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பர்னிச்சர்களை உற்பத்தி செய்து, அதை 'பேக்கிங்' செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வரை, அதை சார்ந்த அனைத்து நிறுவனங்களும், இந்த பூங்காவில் இடம் பெறும்.

பர்னிச்சர்கள் தயாரிப்பதற்கான, திறமையான தொழிலாளர்களை உருவாக்குவதற்காக, துாத்துக்குடியில் உள்ள தொழிற்பயிற்சி மையங்கள் வாயிலாக, பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட உள்ளன. பல்வேறு அறைகலன் நிறுவனங்கள், இங்கு தொழில் துவங்க விருப்பம் தெரிவித்து உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X