தேசிய நெடுஞ்சாலைகள் சேதம் பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்

Added : அக் 01, 2021
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டை அருகே சாத்திக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலை ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன.தேவகோட்டை நகருக்குள் ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோடு பல்வேறு இடங்களில் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி விபத்திற்குள்ளாகின்றன. சாத்திக்கோட்டை என்ற இடத்தில் ரோட்டில்
 தேசிய நெடுஞ்சாலைகள் சேதம்   பள்ளத்தில் சிக்கும் வாகனங்கள்


தேவகோட்டை : தேவகோட்டை அருகே சாத்திக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலை ரோடு சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி தவிக்கின்றன.

தேவகோட்டை நகருக்குள் ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ரோடு பல்வேறு இடங்களில் பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி விபத்திற்குள்ளாகின்றன. சாத்திக்கோட்டை என்ற இடத்தில் ரோட்டில் அரிப்பு ஏற்பட்டு மெகா பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன. இதில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. மெகா பள்ளத்தில் பஸ்கள் ஏறி இறங்குவதற்குள் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.ராமேஸ்வரம் --திருச்சி தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் வாகன போக்குவரத்தும் அதிகரித்துள்ளன. தற்போது பெய்து வரும் மழைக்கு கழிவு நீர் பள்ளத்தில் தேங்கி வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X