கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீர்நிலைகளில் உயிரிழப்பு அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முடிவெடுக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோட்டீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் அருவி, குளம், ஏரி, கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரம்,

சென்னை:நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கைக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முடிவெடுக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோட்டீஸ்வரி என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'தமிழகத்தில் அருவி, குளம், ஏரி, கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. நீர்நிலைகளில் கண்காணிப்பு கோபுரம், கேமரா, தடுப்புச் சுவர், நீச்சலில் நிபுணத்துவம் பெற்றவர்களை ஈடுபடுத்துவது போன்றவற்றால், உயிர்இழப்புகளை பெரும்பாலும் தடுக்க முடியும். அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் பரிந்துரைகள் அளித்திருப்பதாக, வழக்கறிஞர் கனகராஜ் தெரிவித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஹர்ஷராஜ் ஆஜராகி, ''இதுகுறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'ஒவ்வொரு மாவட்டத்திலும், நீச்சல் வீரர்களை ஈடுபடுத்துவது, கண்காணிப்பு கேமரா பொருத்துவது உள்ளிட்ட பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், நிதி ஆதாரத்தை பொறுத்தது. அரசு தான் கொள்கை முடிவெடுக்க வேண்டும். எனவே, அரசு முடிவெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.விசாரணையை, வரும், 22க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X