பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரை வருகை

Added : அக் 01, 2021
Share
Advertisement
மதுரை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்.காலை 8:30 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் கிளம்பி 9:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அவர் 10:30 மணிக்கு பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 11:30 மணிக்கு அங்கிருந்து மதுரை கிளம்புகிறார்.வரும் வழியில் 11:35

மதுரை : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பங்கேற்கிறார்.

காலை 8:30 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானத்தில் கிளம்பி 9:30 மணிக்கு மதுரை விமான நிலையம் வரும் அவர் 10:30 மணிக்கு பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். 11:30 மணிக்கு அங்கிருந்து மதுரை கிளம்புகிறார்.வரும் வழியில் 11:35 மணிக்கு கே.நாட்டார்பட்டி வேளாண் கூட்டுறவு வங்கிக்கு சென்று கூட்டுறவு துறை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று 20 பயனாளிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் பால் மாட்டுக்கடன் உதவிகள் வழங்குகிறார்.

மதுரை வரும் அவர் 12:45 மணிக்கு மேலமாசி வீதியில் உள்ள, காந்தி மேலாடையை துறந்த இடத்திற்கு செல்கிறார். அங்குள்ள காதி கிராப்ட்டில் முதல் விற்பனையை துவக்கி வைக்கிறார். பின் அங்கிருந்து விமான நிலையம் சென்று சென்னை செல்கிறார். பாப்பாபட்டியில் கிராம சபை கூட்டம் நடக்குமிடத்தில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி., செந்தாமரைகண்ணன், ஐ.ஜி., அன்பு, டி.ஐ.ஜி., காமினி, எஸ்.பி., பாஸ்கரன் ஆய்வு செய்தனர்.கூட்ட ஏற்பாடுகளை கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் உள்ளாட்சி அதிகாரிகள் செய்தனர். அமைச்சர்கள் மூர்த்தி, பெரியகருப்பன், தியாக ராஜனும் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X