கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Added : அக் 01, 2021
Share
Advertisement
மதுரை : வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.குலாலர் கல்வி மேம்பாட்டு சங்கம் செயலாளர் தங்கராஜூ தாக்கல் செய்த பொதுநல மனு: குலாலர் சமூகத்தினர் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளனர். அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மிகவும்

மதுரை : வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிரான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

குலாலர் கல்வி மேம்பாட்டு சங்கம் செயலாளர் தங்கராஜூ தாக்கல் செய்த பொதுநல மனு: குலாலர் சமூகத்தினர் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளனர். அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் உள்ளனர். நீதிபதி குலசேகரன் தலைமையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கமிஷனை தமிழக அரசு அமைத்தது. அது ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.மிகவும் பிற்பட்டோர் பிரிவில் வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்தை தமிழக அரசு பிப்.,26ல் கொண்டு வந்தது. பொது விசாரணை நடத்த வில்லை.

பல்வேறு சமூகத்தினரிடம் கருத்துக்கோரவில்லை. சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு தங்கராஜூ குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு தமிழக தலைமைச் செயலாளர், சட்டத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, இதுபோல் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து அக்.,4 ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X