பொது செய்தி

தமிழ்நாடு

கரும்பு உற்பத்திக்கு ஊக்கம்: ரூ.39.40 கோடி ஒதுக்கீடு

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க, 39.40 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிஉள்ளது. தமிழக சட்டசபையில், ஆக., 14ல், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசின் கரும்பு கொள்முதல் விலை முறைப்படுத்தும் சட்டம் மற்றும் விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை, விவசாயிகளுக்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு 42.50 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்; இதற்காக 40

சென்னை:கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை வழங்க, 39.40 கோடி ரூபாயை அரசு ஒதுக்கிஉள்ளது.

தமிழக சட்டசபையில், ஆக., 14ல், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழக அரசின் கரும்பு கொள்முதல் விலை முறைப்படுத்தும் சட்டம் மற்றும் விதிகள் வகுக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் வரை, விவசாயிகளுக்கு கரும்புக்கு டன் ஒன்றுக்கு 42.50 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும்; இதற்காக 40 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில், நேரடியாக ஊக்கத் தொகை வழங்க நிதி ஒதுக்கும்படி, சர்க்கரை கமிஷனர் அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அதை பரிசீலனை செய்த அரசு, 39.40 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி வெளியிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X