பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டுச்சாவடிக்குள் நுழைய தடை

Added : அக் 01, 2021
Share
Advertisement
சென்னை:அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டுச்சாவடிக்குள் நுழைய, மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.ஆணையத்தின் அறிக்கை:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கஉள்ளது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், ஓட்டுப்பதிவு அமைதியாகவும், அச்சுறுத்தல் இன்றியும் நடக்க ஒத்துழைக்க வேண்டும். பதற்ற நிலையை தவிர்க்கும் வகையில்,

சென்னை:அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், ஓட்டுச்சாவடிக்குள் நுழைய, மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

ஆணையத்தின் அறிக்கை:ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில், வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் ஓட்டுப்பதிவு நடக்கஉள்ளது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், ஓட்டுப்பதிவு அமைதியாகவும், அச்சுறுத்தல் இன்றியும் நடக்க ஒத்துழைக்க வேண்டும். பதற்ற நிலையை தவிர்க்கும் வகையில், ஓட்டுச்சாவடிக்கு 200 மீட்டருக்கு அப்பால் அமைக்கப்படும் தேர்தல் முகாம்களில், தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

வாக்காளர்கள், அனுமதி சீட்டு பெற்றவர்கள் தவிர, வேறு யாரும் ஓட்டுச்சாவடிக்குள் நுழையக் கூடாது. தேர்தல் தொடர்பாக புகார் அல்லது பிரச்னை இருந்தால், தேர்தல் பார்வையாளரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தன் சொந்த உபயோகத்திற்காக, ஒரே ஒரு வாகனத்தை மட்டும், ஓட்டுப்பதிவு நாளில் வேட்பாளர் பயன்படுத்த வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை மீறும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

வாக்காளர்கள், வேட்பாளர்கள், முகவர்களை தவிர, அதிகாரப்பூர்வ கடிதம் அளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ஓட்டுச்சாவடிக்குள் நுழைய முடியும். அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களும் நுழையக் கூடாது. ஓட்டளிப்பதற்காக வாக்காளராக நுழையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X