கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: அரசுக்கு அறிவுரை

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை:எந்தப் புகாருக்கும் இடம் கொடுக்காமல், ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணைச் செயலர் இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், 'ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்தல் பார்வையாளர்களாக மத்திய அரசு பணியாளர்களை

சென்னை:எந்தப் புகாருக்கும் இடம் கொடுக்காமல், ஊரக உள்ளாட்சி தேர்தல் நியாயமாக நடப்பதை உறுதி செய்ய, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

அ.தி.மு.க., தேர்தல் பிரிவு துணைச் செயலர் இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், 'ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தேர்தல் பார்வையாளர்களாக மத்திய அரசு பணியாளர்களை நியமிப்பது; மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு. 'கண்காணிப்பு கேமரா, வீடியோ பதிவு உள்ளிட்ட பல கோரிக்கைள் அடங்கிய மனுவை, கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அளித்துள்ளார்.

அதை பரிசீலிக்க, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், ஓட்டுப் பெட்டி வைக்கும் அறைக்குள்ளும் கண்காணிப்பு கேமரா வசதி இருக்க வேண்டும்; தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் கூற வசதியாக, அவர்களின் விபரங்களை தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''முடிந்த அளவு, அனைத்து ஓட்டு சாவடிகளிலும், ஓட்டு பெட்டி வைக்கப்படும். ''அறைக்குள்ளும் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். வட்டார அளவில், மூத்த அதிகாரிகளை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கிறோம்,'' என்றார்.இதையடுத்து, அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டதை பதிவு செய்த முதல் பெஞ்ச், புகாருக்கு இடம் அளிக்காமல், உள்ளாட்சி தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடப்பதை, அரசு அதிகாரிகள் உறுதி செய்யும்படி உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X