கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பழனிசாமியை விசாரிக்க வழக்கு போலீஸ் பதிலளிக்க அவகாசம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை:கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும்கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.மறைந்த ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு அடிக்கடி வந்து தங்குவார். ஜெயலலிதா மறைவுக்கு பின், எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட்டுக்குள் புகுந்து

சென்னை:கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை மற்றும்கொள்ளை வழக்கில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.

மறைந்த ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டுக்கு அடிக்கடி வந்து தங்குவார். ஜெயலலிதா மறைவுக்கு பின், எஸ்டேட் காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட்டுக்குள் புகுந்து கொள்ளையும் அடிக்கப்பட்டது. கடந்த 2017 ஏப்ரலில் இச்சம்பவம் நடந்தது. நீலகிரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி., முரளி ரம்பா.அ.தி.மு.க., நிர்வாகி சஜீவன், எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீலகிரிநீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்தது. மற்றவர்களை விசாரிக்க கோரியதை நிராகரித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தீபு உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

மனுவில், 'வழக்கு விசாரணை அவசரகதியில் நடக்கிறது. சிலரை காப்பாற்றும் முயற்சியில் போலீசார் செயல்படுகின்றனர். வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளப்படவில்லை' என்று கூறப்பட்டுள்ளது.இம்மனு, நீதிபதி நிர்மல்குமார் முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சோலுார்மட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை நான்கு வாரங்களுக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X