புயல், வெள்ள கால மீட்பு ஒத்திகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புயல், வெள்ள கால மீட்பு ஒத்திகை

Added : அக் 02, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல், வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கும்மக்களை மீட்கும் பணியில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி காரிக்கூட்டம் கிராமத்தில் உள்ள குளத்தில் நடந்தது.ராமநாதபுரம் துணை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ராஜூ முன்னிலை வகித்தார். நிலைய
 புயல், வெள்ள கால மீட்பு ஒத்திகை

ராமநாதபுரம் : ராமநாதபுரம் தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல், வெள்ளம் ஏற்பட்டால் அதில் சிக்கும்மக்களை மீட்கும் பணியில் எவ்வாறு ஈடுபடுவது என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி காரிக்கூட்டம் கிராமத்தில் உள்ள குளத்தில் நடந்தது.

ராமநாதபுரம் துணை தாசில்தார் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் ராஜூ முன்னிலை வகித்தார். நிலைய அலுவலர் ஜமால் அப்துல் நாசர், தீயணைப்புவீரர்கள் பங்கேற்றனர்.மக்கள் வெள்ளத்தில் இருந்து எப்படி தப்பிப்பது, சிக்கியவர்களை படகுகளில் சென்று மீட்பது. டியூப், பிளாஸ்டிக் குடம் போன்றவை பயன்படுத்தி மூழ்காமல் உயிர் பிழைப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X