பொது செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளை கவரும் சமூக காடுகள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சாயல்குடி : சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரம் பகுதியில் பசுமையான சமூக காடுகளால் அப்பகுதி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.தமிழக வனத்துறை சார்பில் தேசிய வன வளர்ப்பு திட்டம் மூலம் சாயல்குடி வனச்சரகத்திற்குட்பட்ட கடுகுசந்தை சத்திரம் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் 2003ல் நடப்பட்ட மரக்கன்றுகள் இன்று பசுமையாக காட்சி தருகிறது.நாட்டு உடை மரங்கள், யூக்கலிப்டஸ்
 சுற்றுலா பயணிகளை கவரும் சமூக காடுகள்

சாயல்குடி : சாயல்குடி அருகே கடுகுசந்தை சத்திரம் பகுதியில் பசுமையான சமூக காடுகளால் அப்பகுதி சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது.

தமிழக வனத்துறை சார்பில் தேசிய வன வளர்ப்பு திட்டம் மூலம் சாயல்குடி வனச்சரகத்திற்குட்பட்ட கடுகுசந்தை சத்திரம் பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் 2003ல் நடப்பட்ட மரக்கன்றுகள் இன்று பசுமையாக காட்சி தருகிறது.நாட்டு உடை மரங்கள், யூக்கலிப்டஸ் மரங்கள், வாகை, புங்கை, ஆவி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.காடுகளை சுற்றிலும் ஒற்றையடிப்பாதையின் வழியாக கடந்து சென்றால் பெரிய வனப்பகுதியில் செல்வது போன்ற உணர்வு ஏற்படுவதாக அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இங்குள்ள அடர்வன காப்பு காடுகளில் நட்சத்திர ஆமை, முயல், கீரிப்பிள்ளை, சிறிய முள்ளம் பன்றிகள், அரிய வகை பாம்பு இனங்கள் தங்களுடைய வாழ்வாதார வசிப்பிடமாக உள்ளது.இதேபோன்று சாயல்குடி வனச்சரகத்திற்குட்பட்ட ஒப்பிலான், மாரியூர், முந்தல், வாலிநோக்கம் செல்லும் பிரதான கடற்கரை செல்லும் சாலையின் இருபுறங்களிலும்ஏராளமான நாட்டு உடை மரங்களும் வளர்ந்து காணப்படுகிறது. சாலையின் அருகே மணற்குன்றுகளையும், மன்னார்வளைகுடா கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மரங்கள் வளர்ந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் இயற்கை சூழ்ந்த இடத்தை கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X