பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பனை ஓலை கொட்டான்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் பனை ஓலையின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் இயற்கை சார்ந்த விஷயமாகவும், செயற்கையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகவும் விளங்கி வருகிறது. பிரியாணி பார்சல்தர பனைஓலை கொட்டான்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றன.ரெகுநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேலவலசை கிராமத்தில் ஊராட்சி நிர்வாகமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பவுண்டேஷன் இணைந்து கிராமப்புற
 வெளிமாவட்டங்களுக்கு செல்லும்  பனை ஓலை கொட்டான்கள்

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரத்தில் பனை ஓலையின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் இயற்கை சார்ந்த விஷயமாகவும், செயற்கையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகவும் விளங்கி வருகிறது.

பிரியாணி பார்சல்தர பனைஓலை கொட்டான்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்கின்றன.ரெகுநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட மேலவலசை கிராமத்தில் ஊராட்சி நிர்வாகமும், ஐ.சி.ஐ.சி.ஐ., பவுண்டேஷன் இணைந்து கிராமப்புற மகளிருக்கான பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர்.ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:இங்கு சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான பனைமரங்கள் உள்ளது. பனைமரத்தின் குருத்து ஓலையில் இருந்து ஓலைக்கொட்டான், விசிறி, மணி பர்ஸ், தொப்பி, நலுங்கு பெட்டி உள்ளிட்ட பலவகையான கைவினைப் பொருட்களை பெண்கள் குழுக்களாக தயாரிக்கின்றனர். பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரியாணி கடைகளில் பிளாஸ்டிக் (கண்டெய்னர்) டப்பாக்களுக்கு பதிலாக பனை ஓலையால் கொட்டான்களை வைத்து தர அவற்றை செய்ய ஆர்டர்கள் அதிக அளவில் வந்துள்ளது. பிரியாணி பார்சல் ஓலைப் பெட்டிகளை தயார் செய்து வெளிமாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் ஊராட்சி சார்பில் அனுப்பி வைக்கிறோம். இதில் இருந்து கிடைக்கக்கூடிய தொகையின் மூலமாக பெண்களின் வாழ்வாதாரத்திற்கு, வருமானத்திற்கும் வழி கிடைக்கிறது. இனி மாவட்டத்தில் நடக்கக்கூடிய விழாக்களிலும் பனையோலை பொருட்களின் பங்களிப்பு அவசியம் இருக்கும்,என்றார்.ஊராட்சி துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன், வார்டு உறுப்பினர் சாமிநாதன், ஐ.சி.ஐ.சி.ஐ., பனைத்தொழில் சார் ஊக்குநர் கஸ்தூரி, கார்த்திக் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X