பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் ஆக்கிரமிப்பால் விரயமாகும் மழை நீர்

Added : அக் 02, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கையில் தொடர்ந்து மழை பெய்த போதும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளால் உரிய நேரத்தில் மழை நீர் கண்மாய், ஊரணிகளில் சேகரமாகாமல் விரயமானது.மாவட்ட அளவில் 300 கி.மீ., துாரத்திற்கு கண்மாய் வரத்து கால்வாய் துார்வாரும் திட்டத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார். இத்துார்வாரும் பணிகள் மூலம் 4323 கண்மாய், 4598 ஊரணிகளில் நீர் சேகரமாகும் என மக்கள்

சிவகங்கை : சிவகங்கையில் தொடர்ந்து மழை பெய்த போதும் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளால் உரிய நேரத்தில் மழை நீர் கண்மாய், ஊரணிகளில் சேகரமாகாமல் விரயமானது.

மாவட்ட அளவில் 300 கி.மீ., துாரத்திற்கு கண்மாய் வரத்து கால்வாய் துார்வாரும் திட்டத்தை கலெக்டர் மதுசூதன் ரெட்டி துவக்கி வைத்தார். இத்துார்வாரும் பணிகள் மூலம் 4323 கண்மாய், 4598 ஊரணிகளில் நீர் சேகரமாகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள பல கண்மாய்கள் குடிமராமத்து திட்டத்தில் துார்வாரினர். அதிக பரப்பளவுள்ள பொதுப்பணித்துறை கண்மாய்களில் இது வரை சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படாமல் உள்ளது.

இதனால் கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் செய்ய முடியவில்லை.மேலும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, சேதம் போன்ற காரணத்தால் மழைநீர் செல்ல வழியின்றி மழை நீர் விரயமாகிறது. தொடர் மழை நீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்க கண்மாய், ஊரணிகள் மற்றும் அதன் வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X