பொது செய்தி

தமிழ்நாடு

பழந்தமிழர் பெருமையை எடுத்துக்கூறும் அழகன்குளம் அகழாய்வு பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுமா

Added : அக் 02, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் தமிழர்களின் வணிகத்தொடர்பு, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. அகழாய்வு பொருட்களை அரசு அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் கடற்கரை ஓரத்தில்மண்டபம்
 பழந்தமிழர் பெருமையை எடுத்துக்கூறும் அழகன்குளம் அகழாய்வு பொருட்கள்   பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுமா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளத்தில் பல நுாற்றாண்டுகளுக்கு முன் தமிழர்களின் வணிகத்தொடர்பு, அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன.

அகழாய்வு பொருட்களை அரசு அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரத்தில் இருந்து 10 கி.மீ., துாரத்தில் கடற்கரை ஓரத்தில்மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அழகன்குளம் கிராமம் உள்ளது. இங்கு வங்கக்கடலும், வைகை நதியும் சங்கமிக்கும் முகத்துவாரம் அமைந்துள்ளது. ஒருகாலத்தில் பாண்டிய மன்னர்களின் துறைமுகமாகஅழகன்குளம் விளங்கியதாக தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் இங்கு எட்டுமுறை அகழாய்வுப்பணிகள் நடந்தது.

அப்போது தமிழர்களின் வெளிநாட்டு வணிகத்தொடர்புகள், சங்ககால அரிய பொக்கிஷங்கள், இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் பண்டையகாலத்தில் பயன்படுத்திய ஆபரணபொருட்கள், மண்பாண்டங்கள், நாணயங்கள் என 10ஆயிரத்திற்கு மேற்பட்டவை கண்டெடுக்கப்பட்டது.அவற்றில் ஒரு சில 2300 ஆண்டு பழங்கால பொருட்கள் கடந்த 1986, 87 ஆண்டில் அழகன்குளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமன் நாட்டு மதுக்குடுவைகள், கி.பி., 4ம் நுாற்றாண்டை சேர்ந்த ரோமினிய காசு, எலும்பினால் செய்யப்பட்ட சீப்பு, மோதிரம் கிடைத்தன. இப்பொருட்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தபோது 2300 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் என தெரியவந்தது. இதனையடுத்து 1990,1997 என பல்வேறு கட்டங்களில் அகழாய்வு பணிகள் நடந்துள்ளது. பண்டைய தமிழ் எழுத்துக்கள், ஹரப்பா நாகரீக காலத்தில் இருந்து பகடைக்காய், சங்க கால பாண்டியர்கள் உருவம் பொறித்த செம்பு காசு, விலை உயர்ந்த கல்மணி நகைகள், சங்க வளையல்கள், ரோமானிய நாட்டு கப்பல் உருவம் பொறிக்கப்பட்ட பொருட்கள், இரும்புவாள் ஆகியவை கிடைத்தன. இதன் மூலம் ரோமானிய நாட்டுடன் அழகன்குளத்துக்கு இருந்த வணிக தொடர்பு உறுதி செய்யப்பட்டது.அழகன்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் அசோகன் கூறியதாவது: அழகன்குளம் அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் தற்போது மதுரை, சென்னை ஆகிய இடங்களில் உள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் அகழாய்வு பணிகள் நடந்ததற்கான தடயங்களும் அழிந்துவிட்டன. 2016ல் மீண்டும் அழகன்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது. இதில் தமிழகத்தில் இதுவரை கிடைக்காத சிலுவை பொறித்த முத்திரை, இரும்பு பொருட்கள் தயாரிக்கும் கொல்லம்பட்டறை, சங்குகள், உறைகிணறு திட்டுக்கல் போன்றவை கிடைத்தன. இவற்றையும் மக்கள் பார்வைக்கு காட்டவில்லை.1991 முதல் எட்டு கட்டங்களாக அழகன்குளத்தில் அகழாய்வு நடந்துள்ளது. பழங்கால தமிழர் பெருமையை பாறைசாற்றும் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வைகை கரை நாகரீகத்திற்கு முன்னோடியாக வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகள், பானை ஓடுகள், வாள், கேடயம் என சங்க காலத்திற்குரிய பொருட்கள் கிடைத்துள்ளன.மீண்டும் அகழாய்வுதமிழர்களின் தொன்மை நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையில் மீண்டும் அழகன்குளத்தில் அகழாய்வு செய்யவேண்டும்.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ராமநாதபுரம் மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள், மாணவர்கள் காணும் வகையில் அழகன்குளத்தில் அரசு அருங்காட்சியகம் அமைக்க நரிப்பாலம் அருகே ஒரு ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு அழகன்குளத்தில் ஆழ்கடல் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை விரைவில் செயல்படுத்த வேண்டும், என்றார். ---

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X