பழமரக்கன்றுகளை வாங்குவது குறித்து துணை இயக்குநர் மாயகிருஷ்ணன் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழமரக்கன்றுகளை வாங்குவது குறித்து துணை இயக்குநர் மாயகிருஷ்ணன் ஆலோசனை

Added : அக் 02, 2021
Share
வேடசந்துார் : 'பழ மரக்கன்றுகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை குறித்து திண்டுக்கல் விதை ஆய்வு துணை இயக்குனர் மாயகிருஷ்ணன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் தென்னை, மா, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பழமரக்கன்றுகளை வாங்கி நடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு வாங்கும் போது கவனிக்கவேண்டியவை குறித்து விதை ஆய்வு துணைஇயக்குனர்

வேடசந்துார் : 'பழ மரக்கன்றுகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை குறித்து திண்டுக்கல் விதை ஆய்வு துணை இயக்குனர் மாயகிருஷ்ணன் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் தென்னை, மா, சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பழமரக்கன்றுகளை வாங்கி நடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவ்வாறு வாங்கும் போது கவனிக்கவேண்டியவை குறித்து விதை ஆய்வு துணைஇயக்குனர் தெரிவித்ததாவது:தென்னை, மா, பலா போன்ற பல்லாண்டு கால மரப்பயிர்கள் மூன்றாண்டு காலத்திற்குபிறகே பயன்தருகிறது. அவற்றை வாங்குவதற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.அரசு உரிமம் பெற்ற நர்சரிகளில் மட்டுமே பழக்கன்றுகளை வாங்கவேண்டும்.

விற்பனை உரிமம் இன்றி வாகனங்களில் கொண்டுவந்து விற்போரிடம்வாங்கி நடவு செய்வதால், அதன் தரத்தை உறுதி செய்யமுடியாத நிலையும், மகசூல் இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.வாங்கும் போது கன்றுகளின் ரகம், உற்பத்திவிபரம் தெரிவதுடன், நர்சரி உரிமையாளர்களும் கன்றுகளை விற்கும் போது போதிய விபரங்களை குறிப்பிட்டு, ரசீது வழங்க வேண்டும். உரிமம் பெறாமல்கன்றுகளை விற்பனை செய்வோர் மீது, இன்றியமையாத பொருட்கள் சட்டத்தின் கீழ்கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X