முதுகுளத்துார் அருகே மீன் பிடித்திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதுகுளத்துார் அருகே மீன் பிடித்திருவிழா

Added : அக் 02, 2021
Share
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதிகளில் கடந்தாண்டு பெய்த பருவமழையால் ஊரணி, கண்மாய் தண்ணீர் நிரம்பியது. இதனையடுத்து மேலப்பண்ணைக்குளம் கிராமத்தில் கண்மாய், ஊரணியில் மீன்கள் அதிகமாக இருந்ததால் கிராமமக்கள் பாதுகாத்து வந்தனர். பின்னர் ஊரணியில் தண்ணீர் வற்றியதால் மீன்பிடிக்க முடிவு செய்தனர். நேற்று ஊரணியில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் சிலேபி, கெண்டை, கெளுத்தி

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பகுதிகளில் கடந்தாண்டு பெய்த பருவமழையால் ஊரணி, கண்மாய் தண்ணீர் நிரம்பியது.

இதனையடுத்து மேலப்பண்ணைக்குளம் கிராமத்தில் கண்மாய், ஊரணியில் மீன்கள் அதிகமாக இருந்ததால் கிராமமக்கள் பாதுகாத்து வந்தனர். பின்னர் ஊரணியில் தண்ணீர் வற்றியதால் மீன்பிடிக்க முடிவு செய்தனர். நேற்று ஊரணியில் நடந்த மீன்பிடித் திருவிழாவில் சிலேபி, கெண்டை, கெளுத்தி உள்ளிட்ட மீன்களை பிடித்தனர். இங்கு பிடித்த மீன்களை யாரும் விற்காமல் தாங்களே பயன்படுத்திக்கொள்வர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X