பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் பாம்பு கடி அதிகரிப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : மழைப் பெய்ததை தொடர்ந்து, திண்டுக்கல்லில் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்க தொடங்கியுள்ளதால் கடிபடுவோர் அதிகரித்துள்ளனர்.மாவட்டத்தில் சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதையடுத்து முட்புதர்கள், வயல் வெளிகளில் இருந்து பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவு வருகின்றன.சிலர்

திண்டுக்கல் : மழைப் பெய்ததை தொடர்ந்து, திண்டுக்கல்லில் குடியிருப்புகளை நோக்கி பாம்புகள் படையெடுக்க தொடங்கியுள்ளதால் கடிபடுவோர் அதிகரித்துள்ளனர்.

மாவட்டத்தில் சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதையடுத்து முட்புதர்கள், வயல் வெளிகளில் இருந்து பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்கு அதிகளவு வருகின்றன.சிலர் தெரியாமல் மிதித்து விடுவதால் பாம்புகள் கடித்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். நேற்று கோபால்பட்டி தேவதாஸ் 65, செங்குறிச்சி தனலட்சுமி 32, எமக்கலாபுரம் சந்தோஷ் 12, ராமையன்பட்டி பாத்திமா மேரி 37, ராஜதானிக்கோட்டை பாண்டியம்மாள் 60, உட்பட 10 க்கும் மேற்பட்டோர் பாம்பு கடித்ததால் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தனர்.தீயணைப்பு துறையினர் கூறுகையில், ''பாம்பு கடித்ததும் பதட்டம் கூடாது.

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். பாம்பை பார்த்தால் உடனே தீயணைப்பு, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பாம்பு வராமல் இருக்க வீட்டை சுற்றி துாய்மையாக, கழிவுநீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். பரிசோதித்த பின்னரே காலணிகளை அணிய வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X