பொது செய்தி

தமிழ்நாடு

மலைப்பகுதியில் மதுவிற்பனை

Added : அக் 02, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்கடி மலைப்பகுதியில் சில்லரை மது விற்பனையை ஏனோ மதுவிலக்கு போலீசார் கண்டு கொள்வதே இல்லை.இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. எஞ்சிய கிராமப்பகுதிகளில் சில்லரை மது விற்பனை படுஜோராக நடக்கிறது. கடந்த ஆட்சியில் இலைமறை காயாக நடந்த விற்பனை தற்போது பகிரங்கமாக ஏலம் விட்டு நடத்தும் அளவுக்கு அவலம்

கொடைக்கானல் : கொடைக்கானல், தாண்டிக்கடி மலைப்பகுதியில் சில்லரை மது விற்பனையை ஏனோ மதுவிலக்கு போலீசார் கண்டு கொள்வதே இல்லை.

இப்பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. எஞ்சிய கிராமப்பகுதிகளில் சில்லரை மது விற்பனை படுஜோராக நடக்கிறது. கடந்த ஆட்சியில் இலைமறை காயாக நடந்த விற்பனை தற்போது பகிரங்கமாக ஏலம் விட்டு நடத்தும் அளவுக்கு அவலம் உள்ளது.கீழ்மலையில் சில்லரை மதுவிற்பனை, பார்களுடன் செயல்படுகின்றன.

அவ்வப்போது மலைப்பகுதியில் சோதனை நடத்த வரும் மதுவிலக்கு போலீசாரும் பெயரளவுக்கே வழக்குப் பதிவு செய்கின்றனர். நேர்மை போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன.சில டாஸ்மாக் கடைகள் சில வாரங்களாக மூடப்பட்டு, அப்பகுதியில் சில்லரை மது விற்பனை நடப்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாசன் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X