பொது செய்தி

தமிழ்நாடு

மங்கையர் வாழ்வில் மணமூட்டும் மல்லி நிலக்கோட்டை பகுதியின் வாழ்வாதாரம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : தினமும் காலை 6:00 மணிக்கெல்லாம் நிலக்கோட்டை ஓட்டல்கள் மக்கள் தலையால் நிரம்பி இருக்கும். புதிதாக பார்ப்பவர்களுக்கு இது அதிசயமாக தெரியும். ஆனால் இங்குள்ள மக்களோ பொழுது புலரும் முன்னரே மலரும் மல்லிகையை பறித்தெடுக்க தோட்டங்களுக்கு படையெடுக்கின்றனர். குளிர்ந்த நேரத்திலும், மக்கள் அயர்ந்து தூங்கும் அதிகாலை 3:00 மணிக்கே, நிலத்தில் வியர்வை சிந்த வேலை
 மங்கையர் வாழ்வில் மணமூட்டும் மல்லி   நிலக்கோட்டை பகுதியின் வாழ்வாதாரம்


நிலக்கோட்டை : தினமும் காலை 6:00 மணிக்கெல்லாம் நிலக்கோட்டை ஓட்டல்கள் மக்கள் தலையால் நிரம்பி இருக்கும். புதிதாக பார்ப்பவர்களுக்கு இது அதிசயமாக தெரியும்.

ஆனால் இங்குள்ள மக்களோ பொழுது புலரும் முன்னரே மலரும் மல்லிகையை பறித்தெடுக்க தோட்டங்களுக்கு படையெடுக்கின்றனர். குளிர்ந்த நேரத்திலும், மக்கள் அயர்ந்து தூங்கும் அதிகாலை 3:00 மணிக்கே, நிலத்தில் வியர்வை சிந்த வேலை செய்பவர்கள் இவர்கள் என்பது, உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே தெரியும்.'மதுரை மல்லி' எனப்பெயர் பெற்ற நிலக்கோட்டை மல்லி பல நூறு குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டாலும் நிலக்கோட்டை மல்லிக்கு என தனி மவுசு உள்ளது.இங்கு விளைவிக்கப்படும் மல்லிகையில் அதிகமான சாறு வெளியேறுவதால் நறுமணத் தொழிற்சாலைகளிலும், மணம், ஈரப்பதம் அதிகமிருப்பதால் பெண்களுக்கும், அலங்காரத்திற்கும் பெரிய அளவில் பயன்பட்டு வருவதே இதற்கு காரணம். இதற்கு புவியியல் ரீதியாக வளமான மண் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.மண்ணுக்கு ஏற்ற மல்லிகைநிலக்கோட்டை தாலுகாவில் மல்லிகையை மட்டுமே நம்பி பல பெண்களுக்கு திருமணம் கை கூடியுள்ளது. பலரது வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. இங்கு மலரும் மல்லிகை கடல் கடந்தும் செல்வதால் விவசாயிகளில் சிலர் ஏற்றுமதியாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுபோன்ற காரணங்களால் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்த மல்லிகை தற்போது 1000 ஏக்கரை தாண்டியிருக்கிறது.இவ்வாறு மல்லிகை மணம் வீச மிகமுக்கிய காரணம், மல்லிகை பதியன்களை ராமேஸ்வரத்தில் இருந்து தருவிப்பதே. கடல் மண்ணில் மல்லிகையை பதியனிடுகையில் அதன் சல்லிவேர்கள் பரந்து விரிகின்றன. நிலக்கோட்டை மண்ணிற்கு அவ்வேர்கள் ஏற்றதாக உள்ளதால் இங்கும் பரந்து விரிந்து வளர்கிறது.இவ்வாறு வளரும் மல்லிகையை நம்பி இப்பகுதியில் ஆறு நறுமண தொழிற்சாலைகள், பத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் பெருமளவு வருவாய் பார்க்கின்றனர். பூ கட்டும் தொழில் மூலம் 500 பெண்கள் தினமும் ரூ. 100 முதல் 500 வரை சம்பாதிக்கின்றனர்.பதியன்கள் பற்றாக்குறை இங்கு மலரும் பூக்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, ஷார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதியாகிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தனி விதமாக கட்டி அனுப்பப்படுகிறது. இவைதவிர உதிரிப்பூக்களும் ஏற்றுமதியாகின்றன. பல்வேறு மாநிலங்களுக்கும் 50க்கும் மேற்பட்ட வகைகளில் மாலைகள் கட்டி அனுப்பப்படுகிறது. நிலக்கோட்டை பூக்களால் பூவையர்களின் வாழ்வு மணம் பெறுகிறது என்றால் மிகையல்ல.நிலக்கோட்டை பூ வியாபாரி அருண் கூறுகையில், "ஆண்டுக்கு 10 எக்டேருக்கு மட்டுமே மல்லிகை பதியன்கள் வழங்க அரசு உத்தரவிட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு பற்றாக்குறையாக உள்ளது. எனவே ஆண்டிற்கு 50 எக்டேர் அளவுக்கு மல்லிகை பதியன்கள் வழங்க வேண்டும். கலெக்டர் இதற்கு இசைவு தெரிவிக்க வேண்டும்" என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X