பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி முகவருக்கு தடுப்பூசி கட்டாயம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : 'நிலக்கோட்டையில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்' என, தேர்தல் நடத்தும் அலுவலர் கிரி அறிவுறுத்தினார்.நிலக்கோட்டையில் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் கிரி தலைமையில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.வேட்பாளர்கள் பிரசாரத்தை அக்.7 ம்தேதி மாலை 6:00 மணிக்குள் முடிக்க வேண்டும்.

நிலக்கோட்டை : 'நிலக்கோட்டையில் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்' என, தேர்தல் நடத்தும் அலுவலர் கிரி அறிவுறுத்தினார்.

நிலக்கோட்டையில் வேட்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் கிரி தலைமையில் நடந்தது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.வேட்பாளர்கள் பிரசாரத்தை அக்.7 ம்தேதி மாலை 6:00 மணிக்குள் முடிக்க வேண்டும். தேர்தல் செலவாக ரூ. 85 ஆயிரம் வரையே செலவழிக்க வேண்டும்.

வீடு, வீடாகச் சென்று பிரசாரம் செய்யும் போது 3 நபர்கள் மட்டுமே செல்ல வேண்டும்.ஓட்டுச்சாவடி முகவர்கள், ஓட்டு எண்ணிக்கை முகவர்கள் குறைந்தது முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். மையத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும். வெற்றிபெறும் வேட்பாளரிடம் யாரும் கைகுலுக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை தேர்தல் நடத்தும் அலுவலர் கூறினார். வேட்பாளர்கள் தியாகு, உதயகுமார், அய்யர்பாண்டி, செல்லப்பாண்டி, திருமலைச்சாமி, கோபால் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X