சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாடு இழந்த லாரிகளால் விபத்து

Added : அக் 02, 2021
Share
Advertisement
வேடசந்துார் : வேடசந்துார் லட்சுமணன்பட்டி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரிகள் விபத்தில் சிக்கின.துாத்துக்குடியை சேர்ந்தவர் முருகன் 42. லாரி டிரைவர். ஒசூரில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு துாத்துக்குடிக்கு சென்றார்.வேடசந்துார் லட்சுமணன்பட்டி அருகே அதிகாலை நேரத்தில் கண்அயர்ந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனில்ஏறி கவிழ்ந்தது.
 கட்டுப்பாடு இழந்த லாரிகளால் விபத்து

வேடசந்துார் : வேடசந்துார் லட்சுமணன்பட்டி அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரிகள் விபத்தில் சிக்கின.துாத்துக்குடியை சேர்ந்தவர் முருகன் 42. லாரி டிரைவர். ஒசூரில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு துாத்துக்குடிக்கு சென்றார்.

வேடசந்துார் லட்சுமணன்பட்டி அருகே அதிகாலை நேரத்தில் கண்அயர்ந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த லாரி சென்டர் மீடியனில்ஏறி கவிழ்ந்தது. டிரைவர் காயமின்றி தப்பினார்.அதேநேரம் பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு சோலார் பேனல்களை ஏற்றிய லாரி ஒன்று வந்தது. மதுரை கருப்பாயூரணி ஒண்டிவீரன் 45, ஓட்டி வந்தார். ரோட்டின் குறுக்கே கவிழ்ந்து கிடந்த கன்டெய்னர் லாரியை அருகில் வந்தபின்பே கண்டார். அவசர கதியில் திருப்பியதால்,லாரி ரோட்டோர பள்ளத்தில் பாய்ந்து நின்றது. வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X