கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சனிக்கிழமை வழிபாடு கோவிலை திறக்க வழக்கு

Added : அக் 02, 2021
Share
Advertisement
மதுரை:புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களை திறந்து, பக்தர்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகய்யாசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக ஊரடங்கில், எவ்வித கட்டுப்பாடுமின்றி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுரை:புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில்களை திறந்து, பக்தர்களை அனுமதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம், சாத்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகய்யாசாமி தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக ஊரடங்கில், எவ்வித கட்டுப்பாடுமின்றி பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இடங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஹிந்துவும் புரட்டாசி மற்றும் மார்கழியில், சனிக்கிழமைகளில் கடவுள் நாராயணனை வழிபடுவதன் முக்கியத்துவத்தை உலகம் அறிந்துள்ளது.

ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சனிக் கிழமைகளில் பக்தர்கள் வழிபட அனுமதிக்கக் கோரி, அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு விசாரித்தது.

மனுதாரர் வழக்கறிஞர்: கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மூடப்படுகின்றன. இந்த உத்தரவை, அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

நீதிபதிகள்: அதை அரசு பார்த்துக் கொள்ளும்.

அரசு வழக்கறிஞர்: ஆகம விதிகள்படி கோவில்களில் பூஜைகள் மேற்கொள்ளப்படுகிறது.

நீதிபதிகள்: தலைமைச் செயலர், ஹிந்து சமய அறநிலையத் துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். நவ., 2க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X