போக்சோ வழக்கு 30 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' வழக்கு 30 ஆண்டு சிறை

Added : அக் 02, 2021
Share
நாமக்கல்:சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பீஹார் வாலிபருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஒடிசா மாநிலம், பசந்தலையைச் சேர்ந்த குடும்பத்தினர், நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில், பணியாற்றி வருகின்றனர். அதே பண்ணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ், 22, என்பவரும் பணியாற்றி வந்தார்.அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்
 'போக்சோ' வழக்கு 30 ஆண்டு சிறை

நாமக்கல்:சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த பீஹார் வாலிபருக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலம், பசந்தலையைச் சேர்ந்த குடும்பத்தினர், நாமக்கல் மாவட்டம், பாப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில், பணியாற்றி வருகின்றனர். அதே பண்ணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ், 22, என்பவரும் பணியாற்றி வந்தார்.அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததால், வேலையை விட்டு நீக்கி விட்டனர்.

இந்நிலையில், 2020 மே 27ல், ஒடிசா மாநில தம்பதியின் 6 வயது மகளை கணேஷ் கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமியின் பெற்றோர், நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 'போக்சோ' சட்டத்தில், கணேசனை கைது செய்தனர். நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், நீதிபதி தீர்ப்பளித்தார்.இதில், கணேசனுக்கு, சிறுமியை கடத்திய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம், பாலியல் தொல்லை குற்றத்துக்கு, 20 ஆண்டுகள் சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X