அரச இலையில் டி.வி.ஆர்., ஓவியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரச இலையில் டி.வி.ஆர்., ஓவியம்

Added : அக் 02, 2021
Share
மதுரை:'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் ஓவியத்தை, ஆசிரியர் ஒருவர் அரச இலையில் வரைந்து அசத்தியுள்ளார்.'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 113வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஓவிய ஆசிரியர் தங்கராஜு பாண்டியன், டி.வி.ஆர்., ஓவியத்தை அரசமர இலையில் வரைந்து அசத்திஉள்ளார்.அவர் கூறியதாவது:கடந்த 15
அரச இலையில் டி.வி.ஆர்., ஓவியம்

மதுரை:'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் ஓவியத்தை, ஆசிரியர் ஒருவர் அரச இலையில் வரைந்து அசத்தியுள்ளார்.

'தினமலர்' நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 113வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஓவிய ஆசிரியர் தங்கராஜு பாண்டியன், டி.வி.ஆர்., ஓவியத்தை அரசமர இலையில் வரைந்து அசத்திஉள்ளார்.

அவர் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளாக, ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறேன். வழக்கமான சில வகை ஓவியங்கள் தவிர, வித்தியாசமாக வரைவதில் அதிக ஆர்வம் உண்டு. தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., ஓவியத்தை அரசமர இலையில் வரைந்துள்ளேன். இலைகளை பறித்து, அதில் நல்லதை தேர்வு செய்து, காய வைத்து, 'அக்ரலிக் பெயின்ட்' கொண்டு நுணுக்கமாக சில ஓவிய யுக்திகளை பயன்படுத்தி வரைந்துள்ளேன்.

மற்றொரு இலையில், 'தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 113வது பிறந்த நாள் விழா' என எழுதி அலங்கரித்துள்ளேன். பள்ளி பருவம் முதல் இன்று வரை, தினமலர் வாசகர் என்ற பெருமை உண்டு.பெருமை மிக்க நாளிதழை உருவாக்கிய நிறுவனரை பெருமைப்படுத்த வேண்டும் என்ற சிறு முயற்சி தான் இந்த ஓவியம். இது தவிர சோப் கார்விங், விசிட்டிங் கார்டு, ஆயில், வாட்டர் கலர் ஓவியம், ரங்கோலி வரைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இவரை வாழ்த்த 97881 62545.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X