சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாமக்கல், ஈரோடில் விடிய விடிய மழை காவிரி பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், பள்ளிபாளையம் காவிரி பாலத்தை, தண்ணீர் மூழ்கடித்தது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரு தினங்களாக மழை பெய்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காலை 6:30 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், ஈரோடு நகரில் சாலைகள் வெள்ளக்காடாகின. நகரின் பல பகுதிகளில்
 நாமக்கல், ஈரோடில் விடிய விடிய மழை  காவிரி பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால், பள்ளிபாளையம் காவிரி பாலத்தை, தண்ணீர் மூழ்கடித்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இரு தினங்களாக மழை பெய்கிறது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் காலை 6:30 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், ஈரோடு நகரில் சாலைகள் வெள்ளக்காடாகின. நகரின் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து, வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை இணைக்கும் காவிரி பழைய பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் சென்றது. இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஈரோடு கொல்லம்பாளையம், லோகநாதபுரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 2020ல் கட்டப்பட்ட 191 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி தண்ணீர் தேங்கியது. சுற்றுச்சுவர் இடிந்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, அதிக பட்சமாக கவுந்தப்பாடியில், 14.4 செ.மீ., மழை பெய்தது. பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம், 101.01 அடி. வினாடிக்கு 6,644 கன அடியாக நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 2,200 கன அடி வெளியேற்றப்பட்டது.


நெல் மூட்டைகள் நாசம்ஈரோடு மாவட்டம், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்தில், முதல் போக நெல் அறுவடை முடிந்துள்ளது. இதனால், 34 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு கோபியில் பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களில், தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டுள்ள நெல் குவியலுக்குள் மழை நீர் புகுந்தது. நஞ்சகவுண்டம் பாளையம் கொள்முதல் நிலையத்தில், நெல் குவியலை மழை நீர் சூழ்ந்தது.

பொலவக்காலி பாளையம் கொள்முதல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட மூட்டைகள் நனைந்தன. நனைந்த நெல் குவியல் மற்றும் மூட்டைகளை, உலர வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுஉள்ளனர்.


வீடுகள் சேதம்

நாமக்கல் மாவட்டத்தில், விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மோகனுார் பகுதியில் நேற்று காலை 9:00 மணி வரை மழை நீடித்தது. மோகனுார் - ப.வேலுார் சாலை, வள்ளியம்மன் கோவில் அருகில் உள்ள ரயில்வே பாலத்தின் அடியில், மழை நீர் தேங்கி நின்றது. இதனால், அவ்வழியே சென்ற வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியில் உள்ள மசூதி தெரு பகுதியில், 20க்கும் மேற்பட்ட வீடுகள்; சூரியம்பாளையத்தில், 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. சூரியம்பாளையம் பகுதியில், ஐந்து ஓட்டு வீடுகள் சரிந்து விழுந்தன.


புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் இரவு முழுதும் மழை பெய்ததால், கம்பன் நகர், பெரியார் நகர் பகுதிகளில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால், குடியிருப்பு பகுதிகளில் உள்ளவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.'புதுக்கோட்டை நகரில் மழை நீர் வடிகாலை முறையாக துார்வாராததே இதற்கு காரணம்' என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

திருச்சி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை கன மழை பெய்தது. வாத்தலை, மணப்பாறை, முசிறி, திருச்சி நகரம், துறையூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.இதனால் பல இடங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. மணப்பாறையில் மழை நீர் வடிகால் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதால், 20க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
02-அக்-202107:28:46 IST Report Abuse
NicoleThomson இவ்வளவு தண்ணியையும் பெருமையோடு கடலுக்கு அனுப்பி வைத்து பின்னர் பக்கத்து மாநிலத்தை திட்டி வைப்போம் கழகத்தினரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X