சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்...: மாவட்டம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஸ்ரீவி., குளத்தில் 7 ஏக்கர் மாயம்ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகம் முழுதும் உள்ள கோவில் நிலங்களை 'சேட்டிலைட் ரோவர்' கருவி வாயிலாக அளந்து வரைபடம் தயாரிக்கும் பணி நடக்கிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலை சுற்றிய நிலங்களை ரோவர் கருவி மூலம், அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதில், கோவிலை ஒட்டிய திருப்பாற்கடல் குளம் மட்டும் 9.7 ஏக்கர் இருந்துள்ளது.

ஸ்ரீவி., குளத்தில் 7 ஏக்கர் மாயம்

ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகம் முழுதும் உள்ள கோவில் நிலங்களை 'சேட்டிலைட் ரோவர்' கருவி வாயிலாக அளந்து வரைபடம் தயாரிக்கும் பணி நடக்கிறது. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலை சுற்றிய நிலங்களை ரோவர் கருவி மூலம், அதிகாரிகள் அளவீடு செய்தனர். இதில், கோவிலை ஒட்டிய திருப்பாற்கடல் குளம் மட்டும் 9.7 ஏக்கர் இருந்துள்ளது. தற்போது, குளம் 2 ஏக்கரில் தான் உள்ளது. மற்ற இடங்கள், நெடுஞ்சாலை துறை ரோடுகள், தனியார் நிலங்களாக மாறி உள்ளன. இதை மீட்டெடுக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

படகு சவாரிக்கு 'ஆன்லைன் டிக்கெட்

'நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணியரை, பூம்புகார் போக்குவரத்துக் கழகம் படகில் அழைத்து செல்கிறது. இதில் செல்ல ஆன்லைனில் டிக்கெட்டு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.இதை பரிசீலித்த அரசு, நேற்று முதல் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கியுள்ளது. https://tamilshiponlineticket.com/ என்ற இணையதளத்தில் காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரையிலான, எட்டு சிலாட்டு களில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தந்தை கொலை: மகன் கைது

நாகர்கோவில்: குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதுாரைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 74. நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். மூத்த மகன் ஜெயபால், ஈத்தாமொழி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருக்கிறார்.இரண்டாவது மகன் அச்சுதன், 38; குடி பழக்கம் கொண்ட இவருக்கு திருமணமாகவில்லை. அடிக்கடி தாய், தந்தையிடம் தகராறு செய்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன் தகராறு செய்த அச்சுதன், தந்தையை தாக்கியதில் படுகாயமடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். சுசீந்திரம் போலீசார், அச்சுதனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X