வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

Added : அக் 02, 2021
Share
மதுரை,:வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. குலாலர் கல்வி மேம்பாட்டு சங்கத்தின் செயலர் தங்கராஜு தாக்கல் செய்த பொதுநல மனு: குலாலர் சமூகத்தினர் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளனர். அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மிகவும்

மதுரை,:வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

குலாலர் கல்வி மேம்பாட்டு சங்கத்தின் செயலர் தங்கராஜு தாக்கல் செய்த பொதுநல மனு: குலாலர் சமூகத்தினர் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளனர். அரசியலில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, நீதிபதி குலசேகரன் கமிஷனை தமிழக அரசு அமைத்தது. அது, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், வன்னியர் சமூகத்தினருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டத்தை, தமிழக அரசு பிப்., 26ல் கொண்டு வந்தது. பொது விசாரணை நடத்தவில்லை. பல்வேறு சமூகத்தினரிடம் கருத்து கோரவில்லை. சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு, தமிழக தலைமைச் செயலர், சட்டத்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு 'இதுபோல் நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுடன் சேர்த்து, அக்., 4ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்' என்றது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X