பொது செய்தி

தமிழ்நாடு

தாய் கொடூர கொலை மகனுக்கு தூக்கு தண்டனை

Added : அக் 02, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை:தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகனுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ், 45; மனைவி திலகராணி, 45. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு குடும்பத் தகராறில், கணவர் தங்கராஜ் மீது திலகராணி தலையில் கல்லை துாக்கி போட்டு கொலை செய்ததாக, கறம்பக்குடி போலீசார்
 தாய் கொடூர கொலை மகனுக்கு தூக்கு தண்டனை

புதுக்கோட்டை:தாயின் தலையை துண்டித்து கொலை செய்த மகனுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், வெட்டன்விடுதி அருகே மறவன்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ், 45; மனைவி திலகராணி, 45. தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு குடும்பத் தகராறில், கணவர் தங்கராஜ் மீது திலகராணி தலையில் கல்லை துாக்கி போட்டு கொலை செய்ததாக, கறம்பக்குடி போலீசார் திலகராணியை கைது செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால், சில மாதங்களில் திலகராணி விடுதலை செய்யப்பட்டார்.

திலகராணி, மூத்த மகன் ஆனந்த், 25, இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. 2018 மார்ச் 18ல் தாய் திலகராணியை ஆனந்த் அரிவாளால் தலையை துண்டித்து கொலை செய்து, வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்தார்.மழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆனந்தை கைது செய்தனர். வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து,

நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். தீர்ப்பில் ஆனந்திற்கு, துாக்கு தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.


மகளை கொன்ற தந்தை



ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தோப்படைப்பட்டியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரி, 30; கணவரை பிரிந்து, 10 ஆண்டுகளாக தந்தை ஆதி, 60 வீட்டில் வசித்தார். இரண்டு மகள்கள் உள்ளனர். அழகேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்டு, தந்தை ஆதி கண்டித்தார்.பேரையூர் குண்டாறு அருகே தோட்டத்தில் வேலை செய்த அழகேஸ்வரியை, நேற்று மதியம் ஆதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின், போலீசில் சரண் அடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X