சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி தந்தை, இரண்டு மகன்கள் பலி

Added : அக் 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:துணி உலர்த்தும் போது, கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் தந்தை, இரண்டு மகன்கள் பரிதாபமாக பலியாயினர்.திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திருப்பதி, 48. இவரது மகன்கள் விஜய்கணபதி, 17; பிளஸ் 2, சந்தோஷ்குமார், 15; பத்தாம் வகுப்பும் படித்தனர்.நேற்று காலை மனைவி வசந்தா, 40, வேலைக்கு சென்று விட்டார். திருப்பதி, வீட்டின் முன்

திண்டுக்கல்:துணி உலர்த்தும் போது, கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் தந்தை, இரண்டு மகன்கள் பரிதாபமாக பலியாயினர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திருப்பதி, 48. இவரது மகன்கள் விஜய்கணபதி, 17; பிளஸ் 2, சந்தோஷ்குமார், 15; பத்தாம் வகுப்பும் படித்தனர்.நேற்று காலை மனைவி வசந்தா, 40, வேலைக்கு சென்று விட்டார். திருப்பதி, வீட்டின் முன் இருந்த கம்பியில், துணி உலர்த்த முயன்றார். வீட்டு மின் ஒயருடன் அந்த கம்பி உரசியதில் திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்தது.

அவரை காப்பாற்ற முயன்ற, இரு மகன்களும் உடலில் மின்சாரம் பாய்ந்து கதறினர்.சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர் முருகன், 38; அவரது மனைவி சூர்யா, 26, ஆகியோர் மின் கம்பியை பிடித்தபடி கதறிக் கொண்டிருந்த மூவரையும் மரக்கட்டையால் விடுவிக்க முயன்றனர்.

இதில், ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர். திருப்பதியும், அவரது மகன்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காப்பாற்ற முயன்ற முருகன், சூர்யா காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X