சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆலம் விழுது போல் 27 வாரிசுகள்; உணவுக்கு வழியின்றி தவித்த 80 வயது மூதாட்டி

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:வாரிசுகளாக ஏழு பிள்ளைகள், 20 பேரன் - பேத்திகள் இருந்தும், உணவுக்கு வழியின்றி தவித்த 80 வயது மூதாட்டியை, தன்னார்வ அமைப்பினர் மீட்டனர்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சிறுகுடியைச் சேர்ந்தவர் கருப்பாயி அம்மாள், 80; கணவர் 2018ல் விபத்தில் இறந்தார். கருப்பாயி அம்மாளுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது.அவர்களின் குழந்தைகளாக 20 பேரன் -
 ஆலம் விழுது போல் 27 வாரிசுகள்; உணவுக்கு வழியின்றி தவித்த 80 வயது மூதாட்டி

திண்டுக்கல்:வாரிசுகளாக ஏழு பிள்ளைகள், 20 பேரன் - பேத்திகள் இருந்தும், உணவுக்கு வழியின்றி தவித்த 80 வயது மூதாட்டியை, தன்னார்வ அமைப்பினர் மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சிறுகுடியைச் சேர்ந்தவர் கருப்பாயி அம்மாள், 80; கணவர் 2018ல் விபத்தில் இறந்தார். கருப்பாயி அம்மாளுக்கு ஒரு மகன் மற்றும் ஆறு மகள்கள்; அனைவருக்கும் திருமணமாகி விட்டது.அவர்களின் குழந்தைகளாக 20 பேரன் - பேத்திகள் உள்ளனர். கருப்பாயி அம்மாளுக்கு சொந்தமாக 75 சென்ட் நிலம், கணவர் விபத்தில் இறந்ததால் கிடைத்த 3.75 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை இருந்தன.

இருப்பினும், மூன்றுஆண்டுகளாக அவரது வாரிசுகளில் ஒருவர் கூட அவரை கவனிக்காமல், கொடுமைப்படுத்தினர். சொத்து, பணத்தை பறித்து, வீட்டில் இருந்தும் துரத்தி விட்டனர். உடனிருந்த காலத்தில், ஒரு வேளை உணவும் கொடுக்காமல் துன்புறுத்தியதாக மூதாட்டி கூறினார்.

இந்தக் கொடுமைகளை கண்ட அக்கம் பக்கத்தினர், 'பசியில்லா நத்தம் அறக்கட்டளை' எனும் தன்னார்வ அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அமைப்பின் நிறுவனர்- மது, கருப்பாயியை மீட்டு, நத்தம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, வாரிசுகள் மீது புகார் கொடுத்தார். உலக முதியோர் தினமான நேற்று, மூதாட்டி கருப்பாயி புகார் குறித்து போலீசார் விசாரித்தனர். அவரை முதியோர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X