கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பாலியல் வழக்கில் விசாரணை விமானப்படை நீதிமன்றத்தில் விசாரணை

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் வழக்கில், விமானப்படை நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது. கோவை, ரெட்பீல்ட்ஸ் விமானப்படை கல்லுாரியில், விமான படை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முடிந்து, அறையில் இருந்த, 28 வயது பெண் அதிகாரியிடம், சக அதிகாரியான அமித்தேஷ் ஹர்முக், 29, பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. கைதான அமித்தேஷை கோவை

கோவை:கோவையில் பெண் அதிகாரி கொடுத்த பாலியல் புகார் வழக்கில், விமானப்படை நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது.

கோவை, ரெட்பீல்ட்ஸ் விமானப்படை கல்லுாரியில், விமான படை அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது. பயிற்சி முடிந்து, அறையில் இருந்த, 28 வயது பெண் அதிகாரியிடம், சக அதிகாரியான அமித்தேஷ் ஹர்முக், 29, பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. கைதான அமித்தேஷை கோவை கூடுதல் மகளிர் நீதி மன்றத்தில்ஆஜர்படுத்தியபோது, விமானப் படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கோரி, சட்டப்பிரிவு அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.தொடர்ந்து அவரை, விமானப்படை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விசாரணை நடைமுறை குறித்து, வக்கீல் மோகனகிருஷ்ணன் கூறியதாவது: பெண் அதிகாரி புகார் குறித்து விசாரிக்க, விமானப்படை பயிற்சி கல்லுாரி ஏர்கமாண்டர் உத்தரவிடுவார். இதற்காக, பறக்கும் படை பிரிவின் தலைவர், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுவார். அவர் விசாரணை நடத்தி, ஏர் கமாண்டரிடம் இறுதி அறிக்கை தாக்கல் செய்வார்.

அதன்பின், விமானப்படை பயிற்சி கல்லுாரி வளாகத்தில் உள்ள, ஜெனரல் கோர்ட் மார்ஷியலில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை துவங்கப்படும். தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் விசாரணை நடத்துவர்.இங்கு ஐ.பி.சி., மற்றும் சி.ஆர்.பி.சி.,சட்டப்பிரிவுகளில் விசாரணை நடக்காது. விமானப்படை சட்டம் - 1950ன்படி விசாரணை நடக்கும். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில், வக்கீல்கள் யாரும் ஆஜராக தேவையில்லை. ஆனால், குற்றம் சாட்டப் பட்ட நபர் தரப்பில் தனியாக வக்கீல் வைத்து கொள்ளலாம்.

அல்லது விமானப்படை அட்வகேட் ஜெனரலை விசாரணைக்கு நியமித்து கொள்ளலாம். இதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர் கட்டணம் செலுத்த வேண்டும்.விசாரணை முடிவில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை அளிக்கலாம் அல்லது டிஸ்மிஸ் செய்யலாம். தீர்ப்பை எதிர்த்து, விமானப்படை தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X