சார்பதிவாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சார்பதிவாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்கு

Added : அக் 02, 2021
Share
ராமநாதபுரம்:பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் பத்திரப்பதிவுத்துறை வெளிப்பட்டணம் சார் பதிவாளர் எஸ்.இளங்கோவன் உட்பட நான்குபேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ராமநாதபுரத்தில் மாவட்டபதிவாளர் அலுவலகத்தில் செயல்படும் வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி., உன்னிகிருஷ்ணன் தலைமையில் போலீசார்

ராமநாதபுரம்:பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ராமநாதபுரம் பத்திரப்பதிவுத்துறை வெளிப்பட்டணம் சார் பதிவாளர் எஸ்.இளங்கோவன் உட்பட நான்குபேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் மாவட்டபதிவாளர் அலுவலகத்தில் செயல்படும் வெளிப்பட்டணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி., உன்னிகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மாலை சோதனை நடத்தினர். ரூ. 5.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.98 ஆயிரம் கணக்கில் வராதது என தெரிய வந்தது.

ஆவணங்கள், பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார் சார் பதிவாளர் எஸ்.இளங்கோவன், உதவியாளர் அன்பரசு, நில புரோக்கர் பாலசுப்பிரமணியன், முதுநிலை உதவியாளர் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.நோட்டீஸ் அனுப்பி இவர்கள் விசாரிக்கப்படுவார்கள். முன்னதாக துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும், என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X