பொது செய்தி

தமிழ்நாடு

192 ஊராட்சிகளில் இன்று கிராம சபை

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை:'உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஊராட்சிகளை தவிர, மற்ற ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (2ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்தப்படும்' என, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும், 36 ஊராட்சிகளை தவிர, மற்ற, 192 ஊராட்சிகளில் இன்று (2ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கும். ஊராட்சி நிர்வாகம், பொது நிதி

கோவை:'உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஊராட்சிகளை தவிர, மற்ற ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (2ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்தப்படும்' என, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கோவை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்கும், 36 ஊராட்சிகளை தவிர, மற்ற, 192 ஊராட்சிகளில் இன்று (2ம் தேதி) காலை, 10:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கும். ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தடுப்பு நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட உள்ளது.
மழைநீர் சேகரிப்புக்கான நடவடிக்கை, குடிநீர் சிக்கனம், டெங்கு தடுப்பு, ஊராட்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம், மக்கள் திட்டமிடல் இயக்கம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.துாய்மை பாரதம் இயக்கம், திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப்பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவித்தல், கிராம வறுமை ஒழிப்பு திட்டம், பிரதமர் குடியிருப்பு திட்டம் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. அந்தந்த ஊராட்சி பொதுமக்கள், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X