பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டாள் கோயில் 7 ஏக்கர் நிலம் காணோம்: ரோவர் கருவி அளவிடும் பணியில் கண்டுபிடிப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான 1500 ஏக்கர் நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவி மூலம் அளந்து வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், திருப்பாற்கடல் குளம் 9.7 ஏக்கர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது 2 ஏக்கரில்தான் குளம் உள்ளதால் மீதமுள்ள இடங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.ஆண்டாள் கோயிலுக்கு
 ஆண்டாள் கோயில் 7 ஏக்கர் நிலம் காணோம்: ரோவர் கருவி அளவிடும் பணியில் கண்டுபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான 1500 ஏக்கர் நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவி மூலம் அளந்து வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வரும் நிலையில், திருப்பாற்கடல் குளம் 9.7 ஏக்கர் என்பது தெரியவந்துள்ளது.

தற்போது 2 ஏக்கரில்தான் குளம் உள்ளதால் மீதமுள்ள இடங்களை மீட்டெடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.ஆண்டாள் கோயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்துார், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1500 ஏக்கர் நிலங்கள் உள்ளதாக கோயில் ஆவணங்களில் உள்ளது. இந்த நிலங்கள் தனிநபர்களின் குத்தகை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவி வாயிலாக அளந்து வரைபடம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதற்காக சென்னையை தலைமை இடமாக கொண்டு தமிழகம் முழுவதும் 50 இடங்களில் சேட்டிலைட் ரோவர் மையம் அமைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் பேரையூர், துாத்துக்குடியில் கோவில்பட்டி. தென்காசியில் சிவகிரியில் சேட்டிலைட் மையம் அமைக்கப்பட்டு ரோவர் கருவி மூலம் மதுரை, தேனி, விருதுநகர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கும் பணியில் ஹிந்து அறநிலைய துறை அலுவலர்கள், ஓய்வு நில அளவையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் நகர் பகுதியில் ஆண்டாள் கோயிலை சுற்றிய நிலங்களை சேட்டிலைட் ரோவர் கருவி மூலம் கண்டறிந்து அதனை அதிகாரிகள் அளவீடு செய்த போது, கோயிலை யொட்டிய திருப்பாற்கடல் குளம் மட்டும் 9.7 ஏக்கர் என்பது தெரிய வந்துள்ளது.தற்போது குளமோ 2 ஏக்கரில்தான் உள்ளது. மற்ற இடங்கள் நெடுஞ்சாலை துறை ரோடுகள், நிலங்களாக மாறி உள்ளன. இதை கோயில் நிர்வாகம் மீட்டெடுத்தால் நகரின் மிகப்பெரிய குளமாக திருப்பாற்கடல் விளங்கும் என்பதால், இதை மீட்க பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X