4 நிமிடம்; 47 வினாடி மகுடம் சூடும் நேஹா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

4 நிமிடம்; 47 வினாடி மகுடம் சூடும் நேஹா

Added : அக் 02, 2021
Share
கோவை, நீலாம்பூர் பகுதியை சேர்ந்த தனஞ்ஜெயன் - ஜெயந்தி தம்பதியின் மகள் நேஹாபாரதி,11; தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். தனது தந்தை யோகாசனம் செய்வதை பார்த்து, ஆர்வம் கொண்ட இவர், மூன்று வயதில் இருந்தே யோகாசனம் பயிற்சி பெற துவங்கியிருக்கிறார்.ஆரம்ப காலங்களில், தந்தை கற்றுத்தந்த அடிப்படை யோகாசனங்களை பயிற்சி பெற்றிருக்கிறார். நான்கு வயதில், பல்வேறு ஆசனங்களை
 4 நிமிடம்; 47 வினாடி மகுடம் சூடும் நேஹா

கோவை, நீலாம்பூர் பகுதியை சேர்ந்த தனஞ்ஜெயன் - ஜெயந்தி தம்பதியின் மகள் நேஹாபாரதி,11; தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். தனது தந்தை யோகாசனம் செய்வதை பார்த்து, ஆர்வம் கொண்ட இவர், மூன்று வயதில் இருந்தே யோகாசனம் பயிற்சி பெற துவங்கியிருக்கிறார்.ஆரம்ப காலங்களில், தந்தை கற்றுத்தந்த அடிப்படை யோகாசனங்களை பயிற்சி பெற்றிருக்கிறார். நான்கு வயதில், பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தியுள்ளார். ஆர்வத்தையும் திறமையையும் வளர்க்கும் வகையில், பயிற்சி மையத்தில் சேர்த்துள்ளனர். வேண்டும் என்ற எண்ணத்தில், தீவிரமாக பயற்சி பெற்று, கடினமான ஆசனங்களையும் எளிமையாக செய்து முடிக்கும் வல்லமை பெற்றிருக்கிறார் நேஹா.யோவா யோகா பயிற்சி மைய இயக்குனர் சரவணன் வழிகாட்டுதலில், விருச்சிகாசனத்தில் கின்னஸ் சாதனை படைப்பதற்கான முயற்சிகளை துவக்கியிருக்கிறார். இதற்கு முன், விருச்சிகாசனத்தை இரண்டு நிமிடம், 14 வினாடிகள் செய்து, பெங்களூருவை சேர்ந்த விஜேஸ் என்ற மாணவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். அதனால், மூன்று நிமிடத்துக்கு மேல் விருச்சிகாசனத்தை செய்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கினார். நேஹா பாரதி.தன் முயற்சியில், 3 நிமிடங்களையும் தாண்டி, நான்கு நிமிடம், 47 வினாடிகள் செய்துள்ளார். வீடியோவில் பதிவு செய்யப்பட்ட அக்காட்சிகள், கின்னஸ் புத்தக அமைப்பினருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X