பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய மண்டல உதவி கமிஷனராக சுந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக, உதவி கமிஷனர் (கணக்கு) சுந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் நகர பொறியாளராக பதவி உயர்வு பெற வேண்டுமெனில், மண்டல அலுவலகங்களில் உதவி கமிஷனராக (வார்டு) ஓராண்டு பணிபுரிய வேண்டும்.அதற்காக, மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்துக்கு நிர்வாக பொறியாளராக பணியாற்றிய பார்வதி, மத்திய மண்டல உதவி

கோவை:கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக, உதவி கமிஷனர் (கணக்கு) சுந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் நகர பொறியாளராக பதவி உயர்வு பெற வேண்டுமெனில், மண்டல அலுவலகங்களில் உதவி கமிஷனராக (வார்டு) ஓராண்டு பணிபுரிய வேண்டும்.அதற்காக, மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்துக்கு நிர்வாக பொறியாளராக பணியாற்றிய பார்வதி, மத்திய மண்டல உதவி கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அவர், வேலுாருக்கு மாற்றப்பட்டார்.உதவி கமிஷனர் பணியிடத்தை கூடுதலாக கவனிக்க, உதவி கமிஷனர் (கணக்கு) சுந்தர்ராஜனுக்கு, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் உத்தரவிட்டுள்ளார்.நிர்வாக பொறியாளர் பதவிக்கு வேறு அதிகாரி நியமிக்காததால், அந்தந்த மண்டலத்தைச் சேர்ந்த உதவி நிர்வாக பொறியாளர்களே, நிர்வாக பொறியாளர் பணியை கூடுதலாக கவனிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X