பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை நிறைவேற்றியது மத்திய அரசு: லகு உத்யோக் பாரதி வரவேற்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை;பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு, லகு உத்யோக் பாரதி அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் கோவை பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் அறிக்கை:ரிசர்வ் வங்கி மறுசீரமைப்பு விதிமுறைகள் - 2.0 காரணமாக, வங்கிகள் செயல்படுத்தும் நடைமுறைகளால், சிறு, குறு நிறுவனங்கள் கூடுதல் கடன் பெற முடியவில்லை என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து,

கோவை;பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்தியுள்ள மத்திய அரசுக்கு, லகு உத்யோக் பாரதி அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.இந்த அமைப்பின் கோவை பிரிவு தலைவர் ரவிச்சந்திரன் அறிக்கை:ரிசர்வ் வங்கி மறுசீரமைப்பு விதிமுறைகள் - 2.0 காரணமாக, வங்கிகள் செயல்படுத்தும் நடைமுறைகளால், சிறு, குறு நிறுவனங்கள் கூடுதல் கடன் பெற முடியவில்லை என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து, தெரிவித்தோம்.

அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்துக்கான கடன் செலுத்தும் தேதி நீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக லகு உத்யோக் பாரதி சார்பில் முன்வைத்தோம். பல்வேறு கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சரால் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளன.அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம், 1.0, 2.0ன் கீழ் தற்போதுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்காக கடன் வாங்கியவர்கள், நிலுவையில் உள்ள கடன் தொகையில், 10 சதவீதம் வரை கூடுதல் கடன் பெற தகுதியுடையவர்கள்.அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தில் உதவி பெறாத நிறுவனங்கள், கடந்த மார்ச், 31 வரை நிலுவையில் உள்ள கடன் தொகையில், 30 சதவீதம் வரை கடன் ஆதரவைப் பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர கால கடன் உத்தரவாதத் திட்டம், 3.0 கீழ், திட்டத்தை பயன்படுத்தாதவர்கள், நிலுவையில் உள்ள கடன் தொகையில், 40 சதவீதம் வரை கடன் பெறலாம். இத்திட்டத்தின் காலக்கெடுவை, அடுத்தாண்டு மார்ச், 31 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, மத்திய அரசுக்கு நன்றி.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X