போலீஸ் செய்திகள்: பணம் திருடிய ஊழியர் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை, பெரியார் நகரை சேர்ந்தவர் பிரதீஸ்,34; பாரதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மேலாளராக பணிபுரிகிறார். இதே நிறுவனத்தில், இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்,30 என்பவர் பணிபுரிந்தார்.கடந்த, 24ல் அலுவலக கணக்குகளை பிரதீஸ் சரிபார்த்தார். வங்கிக்கணக்கில் ரூ.50 ஆயிரம் குறைவாக இருந்தது. சுரேஷிடம் விசாரணை நடத்தினார். நிர்வாக இயக்குனர் கையெழுத்திட்ட காசோலையை பயன்படுத்தி,

கோவை, பெரியார் நகரை சேர்ந்தவர் பிரதீஸ்,34; பாரதி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மேலாளராக பணிபுரிகிறார். இதே நிறுவனத்தில், இடையர்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ்,30 என்பவர் பணிபுரிந்தார்.கடந்த, 24ல் அலுவலக கணக்குகளை பிரதீஸ் சரிபார்த்தார். வங்கிக்கணக்கில் ரூ.50 ஆயிரம் குறைவாக இருந்தது. சுரேஷிடம் விசாரணை நடத்தினார். நிர்வாக இயக்குனர் கையெழுத்திட்ட காசோலையை பயன்படுத்தி, ரூ.50 ஆயிரத்தை எடுத்திருந்தது தெரிந்தது. ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார், சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பணத்துடன் வாலிபர் மாயம்

சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் செல்வம், 39. கோவை, ஒண்டிப்புதுார் நேரு நகரில் தங்கி, செங்கல் வினியோகிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது உதவியாளர் வேலு, 32. சில தினங்களுக்கு முன், வசூலான பணம் ரூ.20 ஆயிரத்தை வீட்டில் வைத்து விட்டு, சொந்த ஊருக்கு செல்வம் சென்றார். நேற்று மீண்டும் கோவை திரும்பினார். அப்போது, வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக் கொண்டு வேலு மாயமாகியது தெரிந்தது. சிங்காநல்லுார் போலீசார், அவரை தேடி வருகின்றனர்.
மொபைல்போன் பறித்தவர் கைது
சேலம் மாவட்டம், ஓமலுாரைச் சேர்ந்தவர் சேட்டு,25; லாரி டிரைவர். சரக்கு ஏற்றுவதற்காக, நேற்று கோவை வந்தார். செல்வபுரம் அருகே லாரியை நிறுத்தி விட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த ஒருவர், சேட்டு பையிலிருந்து மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அந்நபரை பிடித்து செல்வபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், செல்வபுரம், வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நாகராஜ், 22 எனத் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X