பொது செய்தி

தமிழ்நாடு

பாசன சொட்டு நீரை குடிக்காதீர் :விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை:''சொட்டுநீர் பாசன நீரை கால்நடைகள், விவசாய தொழிலாளர்கள் குடிக்க பயன்படுத்தக் கூடாது,'' என, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி அறிவுறுத்தியுள்ளார்.கோவையில் பெரும்பாலும் விவசாய பணிகளுக்கு சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறை பயன்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும், 2,155 எக்டர் பரப்பில், ரூ.14.32 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது வரை, 1,192

கோவை:''சொட்டுநீர் பாசன நீரை கால்நடைகள், விவசாய தொழிலாளர்கள் குடிக்க பயன்படுத்தக் கூடாது,'' என, வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி அறிவுறுத்தியுள்ளார்.கோவையில் பெரும்பாலும் விவசாய பணிகளுக்கு சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறை பயன்படுத்தப்படுகிறது. நடப்பாண்டில் மட்டும், 2,155 எக்டர் பரப்பில், ரூ.14.32 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது வரை, 1,192 எக்டர் பரப்புக்கு சொட்டுநீர், தெளிப்பு நீர் பாசன முறை செயல்படுத்த பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி கூறுகையில்,''சொட்டுநீர் பாசனத்தில் உரம் கலந்து தண்ணீர் பாய்ச்சும்போது, விவசாயிகள் கவனத்துடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். வயலில் பணிபுரியும் தொழிலாளர்கள், கால்நடைகள் சொட்டுநீர் பாசன குழாய் நீரை குடிக்க பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால், அதிலுள்ள ரசாயனப் பொருட்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X