பொது செய்தி

தமிழ்நாடு

கருப்பு, சிவப்பு கற்களை எடுத்துட்டாங்க!

Added : அக் 02, 2021
Share
Advertisement
தொண்டாமுத்துார்:நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, பேரூரில், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில், தி.மு.க.,வினர் நட்டிருந்த கற்கள் அகற்றப்பட்டன.பேரூரில், சொட்டையாண்டி குட்டைக்கும், சிறுவாணி மெயின் ரோட்டுக்கும் இடையே, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, 50 சென்ட் இடம் உள்ளது. இங்கு, ஆட்டோ, டொம்போக்கள் நிறுத்தப்படுகின்றன. டெம்போ
 கருப்பு, சிவப்பு கற்களை எடுத்துட்டாங்க!

தொண்டாமுத்துார்:நமது நாளிதழில் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, பேரூரில், பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில், தி.மு.க.,வினர் நட்டிருந்த கற்கள் அகற்றப்பட்டன.பேரூரில், சொட்டையாண்டி குட்டைக்கும், சிறுவாணி மெயின் ரோட்டுக்கும் இடையே, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான, 50 சென்ட் இடம் உள்ளது. இங்கு, ஆட்டோ, டொம்போக்கள் நிறுத்தப்படுகின்றன. டெம்போ நிறுத்துபவர்கள் தங்களின், அரசியல் கட்சி சார்ந்த சங்கத்தின் பெயர் பலகை மற்றும் கொடிக்கம்பங்களை வைத்துள்ளனர்.தி.மு.க.,வினர் டெம்போ நிறுத்தியுள்ள பகுதியில், 15 சென்ட் இடத்தை, தங்கள் பயன்பாட்டுக்கு உட்பட்ட பகுதி என்பதை குறிக்கும் வகையில், சுற்றிலும் வரிசையாக கற்கள் நட்டு, கருப்பு மற்றும் சிவப்பு நிற பெயின்ட் அடித்தனர். இதற்கு, பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினர் நட்டிருந்த கற்களில் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தை மறைக்கும் வகையில், பழுப்பு நிற பெயின்ட் அடித்தனர்.இதுகுறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. பொதுப்பணித்துறையினர், தங்கள் இடத்தில் வைத்துள்ள கட்சி கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை அகற்ற அறிவுறுத்தினர். அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பேரூர் போலீசார் நோட்டீஸ் வழங்கினர். அதில், 'பொதுப்பணித்துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி சார்ந்த சங்க பெயர் பலகை மற்றும் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பொதுப்பணித்துறை இடத்தில், தி.மு.க.,வினர் நட்டிருந்த கற்களை தி.மு.க.,வினரே அகற்றினர். இருந்தாலும், உரிய அனுமதியின்றி அரசியல் கட்சிகளின் பெயர் பலகை மற்றும் கொடிக்கம்பங்கள் இன்னும் உள்ளது. அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X