பொது செய்தி

தமிழ்நாடு

'போதையில் வாகனம் ஓட்டாதீங்க... ப்ளீஸ்!'

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி சார்பில், பல்வேறு இடங்களில் கல்லுாரி மாணவர்கள் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் விதமாக, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நாளை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று, மதியம், 3:30 முதல் மாலை, 5:00 மணி வரை, கல்லுாரி மாணவர்களின் சாலை பாதுகாப்பு
 'போதையில் வாகனம்  ஓட்டாதீங்க... ப்ளீஸ்!'

கோவை:கோவை மாநகராட்சி சார்பில், பல்வேறு இடங்களில் கல்லுாரி மாணவர்கள் நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தை நினைவு கூரும் விதமாக, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நாளை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நேற்று, மதியம், 3:30 முதல் மாலை, 5:00 மணி வரை, கல்லுாரி மாணவர்களின் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்பெற்றது.நவ இந்தியாவில், ராமகிருஷ்ணா பெண்கள் கல்லுாரி மாணவியர், சிட்ரா சந்திப்பில் என்.ஜி.பி., கல்லுாரி மாணவர்கள், சிங்காநல்லுாரில் ஜெயந்திரா கல்லுாரி மாணவர்கள், சுந்தராபுரத்தில் ரத்தினம் கல்லுாரி மாணவர்கள், கோவைப்புதுார் பிரிவில் கிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள் என, பல்வேறு இடங்களில் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.'குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குங்கள்; குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது; ெஹல்மெட் கட்டாயம்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை காண்பித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X