பொது செய்தி

தமிழ்நாடு

கொட்டியது மழை; தேங்கியது தண்ணீர்! நொய்யல் ஆற்றில் நீர் வரத்து குறைவு

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை;வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழைப்பொழிவு காணப்பட்டது. வடவள்ளி, பேரூர், கோவைப்புதுார், குனியமுத்துார், சுந்தராபுரம், வெள்ளலுார், சிங்காநல்லுார், பீளமேடு, கணபதி, துடியலுார், கணுவாய், மருதமலை பகுதிகளில் கனமழை பெய்தது.நகர் பகுதியில், அவிநாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், வடகோவை பாலம், சோமசுந்தரா
 கொட்டியது மழை; தேங்கியது தண்ணீர்! நொய்யல் ஆற்றில் நீர் வரத்து குறைவு

கோவை;வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கோவையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழைப்பொழிவு காணப்பட்டது. வடவள்ளி, பேரூர், கோவைப்புதுார், குனியமுத்துார், சுந்தராபுரம், வெள்ளலுார், சிங்காநல்லுார், பீளமேடு, கணபதி, துடியலுார், கணுவாய், மருதமலை பகுதிகளில் கனமழை பெய்தது.நகர் பகுதியில், அவிநாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், வடகோவை பாலம், சோமசுந்தரா மில் ரோடு, கிக்கானி பள்ளி பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள், தண்ணீரை பம்ப் செய்து, அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மழையால், நகர் முழுவதும் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சரவணம்பட்டி, காளப்பட்டி பகுதிகளில் மரங்கள் வேரோடு பெயர்ந்து சாய்ந்தன. நகரின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், நரசீபுரம், சாடிவயல், ஆலாந்துறை, மாதம்பட்டி, பேரூர், வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை கனமழை பெய்தது. நேற்று சாலைகளில் மழை நீர் தேங்கியிருந்தது.நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என, மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், நொய்யலாற்றில் நீர்வரத்து குறைவாகவே இருந்தது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடியில், மதகு வழியாக மட்டுமே நீர் வெளியேறியது.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அடிவார பகுதியில் பெய்த மழையை விடவும், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் குறைவாகவே பதிவானது. இதனால், நொய்யல் ஆற்றில் நீர்வரத்து குறைந்த அளவே இருந்தது. மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பதால், சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து, கீழ் சித்திரைச்சாவடி வாய்க்கால் மூலம் குளங்களுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது' என்றனர்.வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில்.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மேட்டுப்பாளையத்தில் 23 மி.மீ., அன்னுாரில் 16 மி.மீ., பெ.நா.பாளையத்தில் 7.6 மி.மீ., வேளாண் பல்கலையில், 6 மி.மீ., விமானநிலையத்தில் 8.6 மி.மீ., மழை பெய்தது. வரும், 6ம் தேதி வரை மழைப்பொழிவு காணப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X