பொது செய்தி

தமிழ்நாடு

கட்டட விதிமுறை தெரியாத ஊராட்சி செயலர்கள்...பஞ்சாயத்துன்னாலே பஞ்சாயத்துதான்! ஐந்தாண்டு அனுமதியை ஓராண்டாக மாற்றும் அவலம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கட்டட அனுமதிக்கான கால அவகாசம் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டு, இரு ஆண்டுகளான பின்னும், கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், ஓராண்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் கொடுமை தொடர்கிறது.புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிக்கான காலம் ஓராண்டாக இருந்தது. 2019ல், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகள் உருவாக்கிய போது, இத்திட்ட அனுமதி காலம்

கட்டட அனுமதிக்கான கால அவகாசம் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டு, இரு ஆண்டுகளான பின்னும், கோவை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில், ஓராண்டுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் கொடுமை தொடர்கிறது.புதிதாகக் கட்டப்படும் கட்டடங்களுக்கு வழங்கப்படும் திட்ட அனுமதிக்கான காலம் ஓராண்டாக இருந்தது.

2019ல், தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகள் உருவாக்கிய போது, இத்திட்ட அனுமதி காலம் உள்ளாட்சி அமைப்புக்கேற்ப நீட்டிக்கப்பட்டது. இதன்படி, கிராம ஊராட்சிகளில் கட்டட திட்ட அனுமதிக்கான காலம் ஐந்தாண்டுகளாக மாற்றப்பட்டது.புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்து இரு ஆண்டுகளுக்கு மேலாகியும், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளில், ஓராண்டுக்கு மட்டுமே கட்டட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. வேறு சில மாவட்டங்களிலும் இத்தகைய விதிமீறல் நடந்து வந்தாலும், கோவையில் மிக அதிகமாக நடப்பதாகத் தெரியவந்துள்ளது.

அதேபோன்று, கட்டடங்களின் பரப்பு மற்றும் தளங்களின் அடிப்படையில், கிராம ஊராட்சிகளுக்கு திட்ட அனுமதி வழங்கும் அதிகாரமும் நகர ஊரமைப்புத்துறையால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த அளவு வரையிலும் தங்களால் திட்ட அனுமதி வழங்க முடியும் என்ற விதிமுறையும் தெரியாமல், பல கிராம ஊராட்சிகளில் பெரும்பாலான கட்டடங்களின் திட்ட அனுமதி கோரும் விண்ணப்பங்களை, உள்ளூர் திட்டக்குழுமத்துக்கு அனுப்புவதும் வழக்கமாகவுள்ளது.

கிராம ஊராட்சி செயலர்களாகவுள்ள கீழ்நிலை அலுவலர்களுக்கு, புதிய விதிமுறைகள் தெரியவில்லை என்றால், மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனரும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமான முரணாகவுள்ளது. இத்தனைக்கும் இவ்விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபோதே, அனைத்து மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர்களுக் கும் ஊரக வளர்ச்சி இயக்குனரால், விரிவான விளக்கத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகள் குறித்த அனைத்து விபரங்களும், பொதுமக்களின் பார்வைக்கு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், விதிமுறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளாத அளவில், அதிகாரிகள் 'கடமையாற்றி' வருகின்றனர். அதிகாரிகளின் அறியாமையால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.இவ்விதிமுறைகள் குறித்து, பஞ்சாயத்து செயலர்கள் முதல் மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குநர் வரை அனைவருக்கும் தெரியும் வகையில், அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டியது அவசியம்-நமது நிருபர்-.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X