பொது செய்தி

தமிழ்நாடு

மோசடி வலை விரிக்கும் ஹேக்கர்கள்: வங்கி கணக்கில் கவனம் வேண்டும்: வாடிக்கையாளரை எச்சரிக்கும் வங்கியாளர்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்;வங்கியிலிருந்து பணத்தை கபளீகரம் செய்ய, ஹேக்கர்கள் நுாதன முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர். எனவே, வாடிக்கையாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டுமென, வங்கியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.வங்கி கணக்கு, டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள், ஓ.டி.பி.,யை யாரிடமும் தெரிவிக்க கூடாது. வங்கி அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்ள மாட்டார்கள் என, வங்கிகள் தொடர்ந்து விழிப்புணர்வு
 மோசடி வலை விரிக்கும் ஹேக்கர்கள்: வங்கி கணக்கில் கவனம் வேண்டும்: வாடிக்கையாளரை எச்சரிக்கும் வங்கியாளர்கள்

திருப்பூர்;வங்கியிலிருந்து பணத்தை கபளீகரம் செய்ய, ஹேக்கர்கள் நுாதன முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர். எனவே, வாடிக்கையாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டுமென, வங்கியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.வங்கி கணக்கு, டெபிட், கிரெடிட் கார்டு விவரங்கள், ஓ.டி.பி.,யை யாரிடமும் தெரிவிக்க கூடாது. வங்கி அதிகாரிகள் உங்களை தொடர்பு கொள்ள மாட்டார்கள் என, வங்கிகள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

இதனால், வாடிக்கையாளர்கள் உஷாரானதால், மோசடி பேர்வழிகள், புது யுத்திகளை கையாள துவங்கி விட்டனர். இதனால், ஒரு நுாதன வழியை கையாளத்துவங்கிவிட்டது வலைதள கொள்ளை கும்பல். ஸ்டேட் பாங்கிலிருந்து அனுப்புவது போலவே, 'உங்கள் எஸ்.பி.ஐ., வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இப்போதே, நெட் பேங்கிங்க்-ல் லாகின் செய்து, கே.ஒய்.சி., ல், பான் கார்டு விவரங்களை இணையுங்கள்', என மேசேஜ் அனுப்புகின்றனர். கூடவே, இணையதள லிங்க் கொடுக்கின்றனர்.இந்த லிங்க், 'எஸ்.பி.ஐ., ஆன்லைன்' என்கிற பெயரில் ஹேக்கர்கள் உருவாக்கி வைத்துள்ள இணையதளத்துக்குள் செல்கிறது.
நம்பகத்தன்மையை அதிகரிக்கும்வகையில், ஸ்டேட் வங்கியின் லோகோவுடன், அசல் ஸ்டேட் வங்கி தளம்போலவே காணப்படுகிறது.உள்ளே நுழைந்தவுடன், நெட் பேங்கிங்க் யூசர் ஐ.டி., மற்றும் பாஸ்வேர்டு கேட்கப்படுகிறது. தொடர்ந்து, பெயர், மொபைல் எண் ஆகியவற்றை கேட்கிறது. இவற்றை அளித்தவுடன், கே.ஒய்.சி., முடிவடைந்ததாக, போலி செய்தி காட்டப்படுகிறது. இவற்றை வைத்துக்கொண்டு, மோசடி ஆசாமிகள், மிக சுலபமாக வங்கி கணக்கிலிருந்து தொகையை சுருட்டி விட முடியும்.திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலக்சாண்டர் கூறியதாவது:எந்த வங்கியும், ஆன்லைனில் கே.ஒய்.சி., விவரங்களை அப்டேட் செய்வதற்கு மேசேஜ் அனுப்பமாட்டார்கள்.
வங்கிக்கு நேரடியாக ஆவணங்களை கொண்டுவந்து மட்டுமே, பதிவு செய்ய அறிவுறுத்தி மெசேஜ் அனுப்பப்படும்.வங்கியிலிருந்து வரும் மேசேஜ்கள், அந்த வங்கியின் பெயரிலிருந்து அனுப்பப்பட்டதாகவே வரும்; குறிப்பிட்ட மொபைல் எண்களிலிருந்து அனுப்பப்படாது. போலி மெசேஜ்களில் குறிப்பிட்டிருக்கும் லிங்க் களை தொட்டால் கூட ஆபத்தாகி விடும். எனவே, வாடிக்கையாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X