சிக்னல் இயங்குவதில் சிக்கல்; மக்கள் குற்றச்சாட்டு | Dinamalar

சிக்னல் இயங்குவதில் சிக்கல்; மக்கள் குற்றச்சாட்டு

Added : அக் 02, 2021
Share
அவிநாசி:திருமுருகன்பூண்டியில் 'தி சுன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன்' செயற்குழு கூட்டம், வி.ஜி.வி., கார்டன் குடியிருப்போர் நலச்சங்க கட்டடத்தில் நடந்தது.கூட்டத்துக்கு சங்க தலைவர் காதர்பாஷா, தலைமை வகித்தார். பொது செயலாளர் ராமலிங்கம், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமுருகன்பூண்டி சந்திப்பு சாலையில், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக

அவிநாசி:திருமுருகன்பூண்டியில் 'தி சுன்ஸ்யூமர்ஸ் கேர் அசோசியேஷன்' செயற்குழு கூட்டம், வி.ஜி.வி., கார்டன் குடியிருப்போர் நலச்சங்க கட்டடத்தில் நடந்தது.கூட்டத்துக்கு சங்க தலைவர் காதர்பாஷா, தலைமை வகித்தார். பொது செயலாளர் ராமலிங்கம், அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமுருகன்பூண்டி சந்திப்பு சாலையில், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக பொருத்தப்பட்டுள்ள சிக்னல், கடந்த மூன்று மாதமாக செயல்பாடின்றி உள்ளது. பழுதுநீக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.ரிசர்வ் சைட்களை, மக்கள் நலன் சார்ந்த பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். என்பது உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர், தனசேகர், அன்பழகன், வேதகிரி பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X