பொது செய்தி

தமிழ்நாடு

'பில்' கட்டியதும்  எஸ்.எம்.எஸ்., மின் வாரியத்தில் புதிய வசதி

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருப்பூர்:மின் கட்டணம் செலுத்தியதும், நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியம், மின் நுகர்வை கணக்கீடு செய்து கட்டண நிர்ணயம் செய்து, அதன் விவரத்தை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்கின்றனர். மின்வாரிய இணையத்தில் பதிவேற்றம் செய்ததும், மின்நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, மின் இணைப்பு வாரியாக

திருப்பூர்:மின் கட்டணம் செலுத்தியதும், நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியம், மின் நுகர்வை கணக்கீடு செய்து கட்டண நிர்ணயம் செய்து, அதன் விவரத்தை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்கின்றனர். மின்வாரிய இணையத்தில் பதிவேற்றம் செய்ததும், மின்நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு, மின் இணைப்பு வாரியாக செலுத்த வேண்டிய மின் கட்டண விவரம் அனுப்பி வைக்கப்படுகிறது. கட்டணம் செலுத்த வேண்டிய தேதி விவரமும் அறிவிக்கப்படுகிறது.இதனால், உரிய காலக்கெடுவுக்குள், மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. 'ஆன்லைன்' மூலமாகவும், மின் கட்டணம் செலுத்த, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கட்டணம் செலுத்திய விவரத்தையும், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்க வேண்டுமென, மின்நுகர்வோர் வலியுறுத்தி வந்தனர்.நீண்ட நாள் கோரிக்கையை, மின்வாரிய உயர் அதிகாரிகளும், வாரியத்துக்கு பரிந்துரைத்தனர். அதன்படி, இம்மாதம் முதல், மின் கட்டணம் செலுத்திய விவரமும், உடனுக்குடன், நுகர்வோரின் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் சேவை துவங்கியுள்ளது.இதுகுறித்து கண்காணிப்பு பொறியாளர் ஜவஹர் கூறுகையில், ''மின் கட்டணம் செலுத்தப்பட்ட விவரத்தை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிக்க வேண்டுமென பரிந்துரை செய்திருந்தோம். அதன்படி, இம்மாதம் முதல், புதிய சேவையும் நடைமுறைக்கு வந்துள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X