அவிநாசி;அவிநாசி அருகே பொது கிணறு ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.வேலாயுதம்பாளையம் ஊராட்சி, காசிகவுண்டன்புதுார், அரிஜன காலனியில், 160க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள பொது கிணற்றின் மூலம், கடந்த, 15 ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் குடிநீர் பெற்று வந்தனர்.நாளடைவில் இக்கிணறு பராமரிக்கப்படாததால், தனியார் சிலர் ஆக்கிரமித்து, தங்களின் பயன்பாட்டில் வைத்துள்ளதாகவும், அவிநாசி பி.டி.ஓ., மற்றும் தாசில்தாருக்கு, ஊர் மக்கள் சார்பில், கருப்புசாமி என்பவர் மனு வழங்கினார்.நேற்று துணை பி.டி.ஓ.. ஆனந்த் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அருந்ததிய மக்களின் பயன்பாட்டுக்கு இந்த கிணற்றை சிலர் தானமாக வழங்கியதாகவும், அதை தனியார் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அப்பகுதியினர், அதிகாரிகளிடம் கூறினர்.ஆய்வு நடத்திய அதிகாரிகள், இந்த கிணறு, ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமானதா என ஆய்வு செய்யவும், கிணற்றை ஆக்கிரமித்துள்ள தனியாருக்கு, நோட்டீஸ் வழங்கி, கிணற்றின் மீது போடப்பட்டுள்ள தேங்காய் மட்டை போன்றவற்றை அகற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி, ஊராட்சி செயலருக்கு அறிவுறுத்தினர்.அப்பகுதியினர் கூறுகையில், பல ஆண்டுகளாக பயன்பட்டு வந்த கிணற்றை மீண்டும் துார்வாரி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE